பொது செய்தி

தமிழ்நாடு

பணிப்பெண் குடும்பத்திற்கு கலெக்டர் நிதியுதவி

Added : ஜூலை 30, 2019
Advertisement



திருநெல்வேலி:

மாஜி மேயர் கொலையில் உடன் பலியான பணிப்பெண் குடும்பத்திற்கு கலெக்டர் நிதியுதவி வழங்கினார்.

திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, 66. அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள்,37. ஆகிய மூன்று பேர் கடந்த 23ம் தேதி மர்ம நபர்களால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் மாரியம்மாள் தனது 17, 15, 14 வயதுடைய மூன்று மகள்களை அனாதையாக்கி விட்டு சென்றார். தற்போது அவர்கள் மாரியம்மாள் தாய் வசந்தாவின் அரவணைப்பில் உள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், வசந்தாவிற்கு முதியோர் உதவித்திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவும், மூன்றாவது மகள் ராஜேஷ்வரிக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவி தொகை வழங்குவதற்கான உத்தரவையும் கலெக்டர் ஷில்பா வழங்கினார். இந்நிலையில் மாரியம்மாளின் மூத்த மகள் பிளஸ் 2 படிக்கும் வீரலட்சுமிக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X