பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகளுக்கு 'செல்வ மகள்' கணக்கு

Added : ஜூலை 30, 2019
Advertisement
 பெண் குழந்தைகளுக்கு 'செல்வ மகள்' கணக்கு

பேரூர்:மாதம்பட்டியில், 150 பெண் குழந்தைகளுக்கு, 'செல்வ மகள்' சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டது.மாதம்பட்டி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 150 பெண் குழந்தைகளை, 'செல்வ மகள்' சேமிப்பு திட்டத்தில் சேர்க்கும் விழா நடந்தது. திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஆரம்ப வைப்பு நிதி செலுத்தி, சேமிப்பு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேசுகையில், ''பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள பெரும்பாலான திட்டங்கள், பெண்கள் பயன்பெறும் வகையிலானவை. அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில், திட்டங்களை அறிவித்து வருகிறார். தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் உள்ள, அனைத்து பெண் குழந்தைகளையும், 'செல்வமகள்' திட்டத்தில் சேர்ப்பதே எங்களின் நோக்கம்,'' என்றார்.கோவை கோட்ட தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜாகரே, 'செல்வமகள்' திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X