பொது செய்தி

தமிழ்நாடு

மருதமலையில் நகர முடியலை! ஆடி 18ல் கட்டாயம் சுதாரிக்கணும்

Added : ஜூலை 30, 2019
Advertisement
 மருதமலையில் நகர முடியலை! ஆடி 18ல் கட்டாயம் சுதாரிக்கணும்

வடவள்ளி:மருதமலைக்கு ஆடி 18ல், பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்தால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மருதமலையில் பார்க்கிங் இடவசதி குறைவாக இருப்பதால், ஒரே சமயத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள், அடிவார நுழைவாயில் பகுதியில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.இதனால் விசேஷ காலங்களில், அடிவார நுழைவாயில் கேட்டிலிருந்து, சட்டக்கல்லூரி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், மலை மேல் இருந்து, கீழே இறங்கும் வாகனங்கள் செல்ல இடவசதி இல்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்தாண்டு, ஆடி 18, வரும் சனிக்கிழமை வருவதால், வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகரிக்கும். அன்றைய தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க,கல்வீரம்பாளையம் பகுதியிலிருந்து மருதமலைக்கு வரும் வாகனங்களை, பாரதியார் பல்கலை கடந்து ஐ.ஓ.பி., காலனி, அன்னை இந்திரா நகர் வழியாக, மருதமலை அடிவார நுழைவாயில் கேட் அடைய செய்யலாம்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து, ஐ.ஓ.பி., காலனி வரையிலான மருதமலை மெயின்ரோட்டை, மேலிருந்து கீழே இறங்கும் ஒருவழிப்பாதையாக மாற்றலாம். இதனால், மெயின் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.விசேஷ காலங்களில், அடிவார நுழைவாயில் கேட்டிலிருந்து, சட்டக்கல்லூரி வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், மலை மேலிருந்து, கீழே இறங்கும் வாகனங்கள் நகர இடவசதி இல்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X