பொது செய்தி

தமிழ்நாடு

புத்துயிர் பெறுமா கிராம மேம்பாட்டு திட்டம்

Added : ஜூலை 30, 2019
Advertisement

கோவை:பாலிடெக்னிக் கல்லுாரிகளில் செயல்பட்டு வந்த, சமூக மேம்பாட்டு திட்டத்திற்கு கடந்த நான்காண்டுகளாக நிதி நிறுத்தப்பட்டுள்ளதால், பயிற்சி வகுப்புகள் முடங்கியுள்ளன.மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை சார்பில், பல ஆண்டுகளாக, சமூக மேம்பாட்டு திட்டம், நாடு முழுவதும் 1,149 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. விதவைகள், ஆதரவற்றோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக ஆண்டுதோறும், 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவையில் அரசு மகளிர் மற்றும் அரசு இருபாலர் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மொபைல் போன் பராமரிப்பு, அழகு கலை, தையல், பொம்மை, மெழுகு மற்றும் சோப்பு தயாரிப்பு, கணினி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டன. சிறைச்சாலை உள்ளிட்ட பிற பொது இடங்களிலும், தொழில் பயிற்சி வழங்கினர்.
இந்நிலையில், 2016ம் ஆண்டுடன் மத்திய அரசு நிதி வினியோகத்தை நிறுத்தியது. இதனால், அனைத்து கல்லுாரிகளிலும், பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. காந்திபுரம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் நித்யா கூறுகையில், ''மகளிர் சுய உதவிக்குழு மூலம், பல பெண்கள் இப்பயிற்சிகளில் சேர்ந்து, சுயமாக தொழில் செய்து வருகின்றனர். அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் கடந்த ஏப்., 2018ம் ஆண்டு முதல், பயிற்சி நடைபெறவில்லை. பலருக்கு பயன்பட்ட இப்பயிற்சி வகுப்புகளை மீண்டும் துவக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X