மூன்றடுக்கு ஊராட்சி முறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றடுக்கு ஊராட்சி முறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

Added : ஜூலை 30, 2019
 மூன்றடுக்கு ஊராட்சி முறை அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

மேட்டுப்பாளையம்:கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என, மூன்றடுக்கு ஊராட்சிமுறைகளின் செயல்பாடுகள் குறித்து, காரமடை பி.டி.ஒ., அலுவலகத்தில், பிறதுறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி வளர்ச்சி திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இப்பயிற்சி வகுப்புக்கு முதன்மை பயிற்றுனர் பாலமுருகு தலைமை வகித்து, துவக்கி வைத்தார். பயிற்றுனர் கல்யாணி வரவேற்றார்.
இப்பயிற்சியில் ஒவ்வொரு ஊராட்சியிலிருந்தும், பள்ளி தலைமை ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர், கிராம செவிலியர், அங்கன்வாடி பணியாளர், ரேஷன் கடை ஊழியர்கள் என, ஐந்து பேர் பங்கேற்றனர்.பயிற்சியில், தமிழ்நாடு ஊராட்சி சட்டம், 1994 ன் சிறப்பு பற்றியும், மூன்றடுக்கு முறையில் எவ்வாறு மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.
தேர்தல் எவ்வாறு நடைபெறும், மக்கள் தொகை அடிப்படையில், விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பதவி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்வது குறித்தும் கூறப்பட்டது.ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் எவ்வாறு நடத்துவது, இதில் யார் யார் எல்லாம் பங்கேற்று பேசுவது, ஊராட்சி வரவு செலவினங்களை வாசிக்க வேண்டும் என்பது பற்றியும் விளக்கி கூறப்பட்டது. மேலும் பயிற்சியில், நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள் என, வறுமை ஒழிப்பு, பட்டினி இல்லாத நிலை, நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம், குடிநீர், சுகாதாரம், மாற்று எரிசக்தி, வேலைவாய்ப்பு பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் குறித்தும், கூட்டத்தில் விளக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X