பொது செய்தி

தமிழ்நாடு

ராமகிருஷ்ணா பாலிடெக்னிக்கில் மாநில தொழில் நுட்ப போட்டிகள்

Added : ஜூலை 30, 2019
Share
Advertisement

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெனிக் கல்லுாரியில், மாநில அளவிலான தொழில் நுட்ப போட்டிகள், ஆக., 22ம் தேதி நடக்கிறது.இத்தொழில் நுட்ப போட்டியில், தமிழகம் உட்பட கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.
பிரிவு ஒன்றில், கட்டடவியல் துறை சார்ந்த மாணவர்களும், பிரிவு இரண்டில், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் துறை மாணவர்களும், பிரிவு மூன்றில், எலக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் துறை சார்ந்த மாணவர்களும், பிரிவு நான்கில், கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் துறை மாணவர்களும் பங்கேற்கலாம்.தேர்வு செய்யப்படும் படைப்புகள் போட்டி நடக்கும் ஆக., 22ம் தேதி தங்கள் படைப்புகளை விளக்கி காண்பித்தல் வேண்டும்.
நுழைவுக் கட்டணம் இல்லை. ஒவ்வொரு பிரிவிலும், தகுதி பெறும் முதல் மூன்று படைப்புகளுக்கு முறையே, 5 ஆயிரம், 3 ஆயிரம் மற்றும், 2 ஆயிரம் ரூபாய் என, நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்படும்.படைப்புகளை ஆக., 16 ம் தேதிக்குள், அனுப்பி வைக்க வேண்டும். விபரங்களுக்கு, ஆண்டனி பிரதீஷ், 98942 70186 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X