பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி

Added : ஜூலை 30, 2019
Advertisement
 அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி

மஞ்சூர்:மஞ்சூர் அருகே, அரசு நிலத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டத்தின் செடிகள் 'பொக்லைன்' உதவியுடன் அகற்றப்பட்டன.மஞ்சூர் அருகே, முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை, அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து தேயிலை சாகுபடி செய்து வந்தனர்.
இந்நிலையில், 'ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி அரசுக்கு சொந்தமானது; இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு அந்த பகுதியை, அரசு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட வழங்க வேண்டும்,' என, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.
இதனையடுத்து, குந்தா வருவாய் துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன், இடத்தை காலி செய்ய, ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த வாரம் குந்தா வருவாய்த் துறை சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம், அங்கிருந்த செடிகளை அகற்ற வருவாய் துறையினர் சென்றனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் இயந்திரம் முன்பு படுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், அதிகாரிகள் திரும்பினர்.இந்நிலையில், நேற்று மாலை, குந்தா தாசில்தார் சரவணன் தலைமையில் குந்தா வருவாய் துறை ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஒரே நேரத்தில் சென்று, பொக்லைன் மூலம், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தேயிலை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்றும் இப்பணி நடந்தது. மாலையில் செடிகள் முழுமையாக அகற்றப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது.குந்தா தாசில்தார் சரவணன் கூறுகையில், ''தாயகம் திரும்பிய, 25 பயனாளிகளுக்கு அப்பகுதியில் வீட்டுமனைக்கு இடம் ஒதுக்கப்படுவதால், அங்கு ஆக்கிரமிக்கப்பட்டு, 5 ஏக்கரில் விளைவிக்கப்பட்ட தேயிலை செடிகள், பொக்லைன் கொண்டு இரண்டு நாட்கள் முழுமையாக அகற்றப்பட்டது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X