பொது செய்தி

தமிழ்நாடு

புடவை, வஸ்திரங்கள் ஏலம் விடப்படுமா?

Added : ஜூலை 30, 2019
Advertisement

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஐந்து ஆண்டுகளாக சேர்ந்துள்ள, பிரார்த்தனை புடவைகள், பட்டு வஸ்திரங்களை ஏலம் விட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, விசேஷ நாட்களின்றி, பிற தினங்களிலும், அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.துலாபார வழிபாட்டுடன், நேர்த்திக் கடனாக, கந்தசுவாமிக்கு மயில்கண் பட்டு வஸ்திரம், வேட்டி துண்டு, தெய்வானை அம்மனுக்கு, விலை உயர்ந்த புடவைகளை, பக்தர்கள் சார்த்துகின்றனர்.இவ்வாறு சார்த்தப்படும் புடவை, பட்டு வஸ்திரங்கள், அவ்வப்போது ஏலம் விடப்படும். குறிப்பாக, கிருத்திகை நாளில், போட்டி போட்டு, ஏலம் எடுப்பர். கடந்த, 2014ம் ஆண்டு வரை, இந்த ஏலம் நடந்தது. ஐந்து ஆண்டுகளாக ஏலம் நடைபெறாததால், கோவிலில் ஏராளமான வஸ்திரங்கள் சேர்ந்துள்ளன.கோவில் நிர்வாகம், வரும் கிருத்திகை நாளிலாவது, புடவை, பட்டு வஸ்திரங்கைள ஏலம் விட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X