பொது செய்தி

தமிழ்நாடு

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டோருக்குஉடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

Added : ஜூலை 31, 2019
Advertisement

ராமநாதபுரம்: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், என சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சப் கோர்ட் நீதிபதி ப்ரீத்தாபேசினார்.ராமநாதபுரம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் உள்ள வக்கீல்களுக்கு பயிற்சி முகாம்நடந்தது. இதில் போக்சோ வழக்கில் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் போக்சோ வழங்கில் ஆஜராகும் அரசு வக்கீல்களுக்கு உதவ வேண்டும். இது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை வகித்த நீதிபதி ப்ரீத்தா பேசியதாவது:போக்சோ சட்டம் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை. இச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பெயர் விபரங்கள் வெளியிடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை ஹார்டு காப்பி, சாப்ட் காப்பி மூலம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்க கூடாது. அவர்களது இடத்தில் வைத்து தான் விசாரிக்க வேண்டும்.வாக்குமூலம் பதிவு செய்யும் போது சீருடை அணியக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். தவறான புகார் கொடுத்தால் தண்டனை வழங்கப்படும். குற்றவாளி தொலைந்தாலோ, இறந்தாலோ கண்டிப்பாக பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், தொடக்கூடாதது பற்றியும் பெற்றோர் சொல்லித்தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் ஜே.ஜெனித்தா வக்கீல்கள் சங்க செயலாளர் நம்புநாயகம், வக்கீல்கள் அன்புசெழியன், கதிரவன், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். வக்கீல் ஆனிஸ் சோனியா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X