பொது செய்தி

தமிழ்நாடு

பால் காளானில் நல்ல வருவாய் ஈட்ட முடியும்

Added : ஜூலை 31, 2019
Share
Advertisement
 பால் காளானில்  நல்ல வருவாய் ஈட்ட முடியும்

பால் காளானில் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என, உத்திரமேரூர் அடுத்த, காரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, பட்டதாரி இளைஞர், ஜெ.லோகேஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:சிறிய கொட்டகையில், பல வித காளான்களை வளர்க்கலாம். 100 பைகளில் காளான் விதை விதைத்தால், 45 நாட்களுக்கு பின், 50 கிலோ பால் காளான் அறுவடை செய்யலாம். அதற்கான சீதோஷ்ண நிலையை பராமரிக்க வேண்டும்.கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்தால், மாதம், 10 ஆயிரம் வரை, வருவாய் ஈட்டலாம். இடத்திற்கேற்ப வளர்த்தால், அதிக வருவாய் பார்க்கலாம். இதை, அனைத்து பருவ காலங்களிலும் வளர்க்க முடியும் என்பதால், கூடுதல் வருவாய் ஈட்டலாம். காளான் விதையை, நாங்களும் விற்பனை செய்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 89739 67345

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X