பொது செய்தி

தமிழ்நாடு

பாழாகும் மண்புழு உரக்கூடம்

Added : ஜூலை 31, 2019
Advertisement

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த குருக்கத்தஞ்சேரி ஊராட்சியில், கடந்தாண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், மண்புழு உரக்கூடம் அமைக்கப்பட்டது.

இதற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து அதனை பதப்படுத்தி, மண்புழு வளர்க்க, 9 கான்கிரீட் தொட்டிகளுடன் கொட்டகை அமைக்கப்பட்டது. கட்டி முடித்து 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உரக்கூடம் பாழாவதுடன், அரசு நிதியும் வீணாகிறது.எனவே, மண்புழு உரக்கூடத்தை சீரமைத்து, உரம் தயாரிக்கும் பணியை துவங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X