பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி மதகை சீரமைத்த இளைஞர்கள்

Added : ஜூலை 31, 2019
Advertisement

செஞ்சி : செஞ்சி சிறுகடம்பூர் ஏரியில் பழுதான மதகை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் சீரமைத்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செஞ்சி நகரில் உள்ள சிறுகடம்பூர் ஏரி விவசாயத்திற்கு மட்டுமின்றி செஞ்சி நகரின் நிலத்தடி நீரை உயர்த்தும் முக்கிய நீர்ஆதாரமாக உள்ளது. மிகப்பெரிய ஏரியான இதில் இருந்து 265 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது.இரண்டு ஆண்டாக ஏரி நிரம்பாமல் இருந்ததால் மதகுகள் பராமரிக்கப்படாமல் பழுதடைந்து இருந்தன. இந்நிலையில், செஞ்சி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சிறுகடம்பூர் ஏரிக்கு வந்த மழைநீர் மொத்தமும் மதகு வழியாக வெளியேறியது.இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

அதன் பிறகும் பொதுப்பணித்துறையினர் மதகை சரி செய்யவில்லை. செய்தியை பார்த்த செஞ்சிக்கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் ஏரி மதகை சீரமைக்க முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக இச்சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மதகை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.உடைந்திருந்த லீவரை சரி செய்தனர். தண்ணீர் வெளியேறாமல் தடுக்கும் கட்டையை புதிதாக தயார் செய்து மதகில் பொருத்தி தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.

அத்துடன் மதகின் இருப்பு பகுதிகளில் பிரைமர் பெயின்ட் அடித்து புதுப்பித்துள்ளனர். இதனால் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவது தடைப்பட்டுள்ளது.அடுத்து மழை பெய்யும்போது ஏரி விரைவாக நிரம்புவதற்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இளைஞர்கள் சேர்ந்து ஏரி மதகை சரி செய்திருப்பது இப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X