பொது செய்தி

தமிழ்நாடு

திருவான்மியூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துரித சேவை வழங்க புதிய நடைமுறை

Added : ஜூலை 31, 2019
Advertisement
 திருவான்மியூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்  துரித சேவை வழங்க புதிய நடைமுறை

திருவான்மியூர்:காத்திருப்பு நேரத்தை தவிர்க்க, திருவான்மியூர், வட்டார போக்குவரத்து அலுவலக நுழைவு வாயிலில், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் அமர்ந்து, துரித சேவை வழங்கும் நடைமுறை, பொதுமக்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திருவான்மியூர், வட்டார போக்குவரத்து அலுவலகம், இ.சி.ஆரில் உள்ளது. தினசரி, 100 பேர் ஓட்டுனர் உரிமம்; 80 பேர், உரிமம் புதுப்பித்தல்; 100 பேர் வாகனப்பதிவு மற்றும் இதர தேவைகளுக்காக, 100க்கும் மேற்பட்டோர், இந்த அலுவலகத்தை நாடுகின்றனர்.அனைத்து சேவைகளும், 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக நடைபெறுகின்றன. தேதி ஒதுக்கப்பட்ட நாளில், சம்பந்தப்பட்டவர், அலுவலகம் செல்ல வேண்டும்.அங்கு, வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள், ஆன்லைனில் பதிவு செய்த மனுதாரர் தான் என்பதை, புகைப்படம், ஆவணங்கள் அடிப்படையில் உறுதி செய்து. உரிமம் வழங்க நடவடிக்கை எடுப்பர்.தொலைந்த ஆவணங்களை பெறுதல், பெயர் மாற்றம், வெளி மாநில வாகனங்கள் பதிவு உள்ளிட்ட மனுக்களை, ஆர்.டி.ஓ., ஆய்வு செய்வார்.இவர், தனி அறையில் அமர்ந்திருப்பார். அலுவலக உதவியாளர் அனுமதிக்கு பின், அவரை பார்க்க முடியும். உள்ளே, அரசியல்வாதிகள், வி.ஐ.பி., உள்ளிட்ட நபர்கள், ஆர்.டி.ஓ.,விடம் பேசிக் கொண்டிருந்தால், பொதுமக்கள், வெளியே பல மணி நேரம், கால்கடுக்க காத்து நிற்க வேண்டி வரும்.இதனால், நேர விரயம் அதிகரித்து, சேவை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
பெரும்பாலான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், இந்த நடைமுறை தான் உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், புது நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.காலை, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, ஆர்.டி.ஓ., மற்றும் ஆய்வாளர்கள், அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்திருப்பர். பொதுமக்கள், தங்கள் தேவைகளை பொருத்து, ஆர்.டி.ஓ., அல்லது ஆய்வாளர்களை, உடனுக்குடன் சந்திக்க முடிகிறது.காத்திருப்பு தவிர்த்து, துரித சேவை கிடைப்பதால், இந்த நடைமுறை, பொதுமக்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதர, வட்டார போக்குரவத்து அலுவலகங்களிலும், இதே நடைமுறையை பின்பற்றினால், பொதுமக்கள் அதிகம் பயன் அடைவர்.பணி புரியும் பொதுமக்கள், சில மணி நேர அனுமதி, அரை நாள் விடுப்பு எடுத்து, அலுவலகத்தை நாடுகின்றனர். இங்கு, காத்திருப்பு நேரம் அதிகரிக்கும் போது, அவர்களுக்கு பணி இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்த்து, துரித சேவை வழங்க, இந்த நடைமுறையை பின்பற்றுகிறோம். அறையில், தனித்தனியாக சந்திக்கும்போது, நேர விரயம் ஏற்படுகிறது. யாராக இருந்தாலும், ஒரே இடத்தில் சந்தித்து, சேவையும் துரிதமாக வழங்குகிறோம். அலுவலக கோப்புகள், ஆய்வு பணியும் தொய்வில்லாமல் நடக்கிறது.பி.ஆர்.யுவராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி, திருவான்மியூர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X