அரசியல் செய்தி

தமிழ்நாடு

டி.எம்.கே.வுக்கு உதயநிதி புது விளக்கம்

Added : ஜூலை 31, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
தி.மு.க.,வுக்கு முற்றிலும் புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் பணியில், தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, இரண்டாவது நாளாக, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, நேற்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்

தி.மு.க.,வுக்கு முற்றிலும் புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். வேலூர் லோக்சபா தொகுதி தேர்தல் பணியில், தி.மு.க., இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, இரண்டாவது நாளாக, தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, நேற்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டதாவது:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு, மாபெரும் வெற்றியை தந்ததற்கு மிக்க நன்றி.லோக்சபா தேர்தலின்போது, தமிழகம் முழுக்க நான் தி.மு.க., சார்பில் பிரசாரம் செய்தேன். அப்போது, வேலூர் தொகுதியில் இருந்துதான், நான் முதன்முதலாக பிரசாரத்தை தொடங்கினேன்.இப்போது, தி.மு.க., இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்ற பின்னர், நான் பங்கேற்கும் முதல் பிரசாரக் கூட்டமும் இதுதான் என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. டி.எம்.கே., என்றால் திராவிட முன்னேற்றக் கழகம். டி.எம்.கே., என்றால், துரை முருகன் கதிர்ஆனந்த் என்றும் கூறலாம். எனவே, அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்."இப்படி, உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக பிரசாரம் செய்தது, தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.- நமது நிருபர் -


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
31-ஜூலை-201915:05:24 IST Report Abuse
s.rajagopalan திரைப்படத்தில் கொகோடி கட்டி பறந்தாகி விட்டது...அரசியலில் கிளம்பி விட்டார். தி மு க 'வாரிசு' அரசியலை இவர்தான் ஒழிப்பார். நல்ல செய்திதானே ?
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
31-ஜூலை-201909:29:31 IST Report Abuse
Girija அய்யோ அய்யோ அப்படியே பழமொழியை அதே மாதிரி மாத்தி சொல்லும் " பூனைக்கு பிறந்தது புலி ஆகுமா"
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
31-ஜூலை-201904:38:36 IST Report Abuse
B.s. Pillai The Most Fitting expansion is " Thiruttu Munnetra Kazhagam "
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X