பொது செய்தி

தமிழ்நாடு

கீழே கிடந்த ரூ.7 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சை பெண்ணுக்கு பாராட்டு

Added : ஜூலை 31, 2019
Advertisement


தஞ்சாவூர் தஞ்சை அருகே கடைவீதியில் ஆதார்கார்டு, பான்கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம், 7 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றுடன் கிடந்த பையை எடுத்து உரியவர்களிடம் சேர்த்த கிராமத்து பெண்ணை போலீசார் பாராட்டினர்.
தஞ்சாவூர், பூதலுாரை அடுத்துள்ள அய்யனார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னம்மாள். எழுதப்படிக்க தெரியாதவர். இவர் கடந்த, 24ம் தேதி பூதலுார் நால்ரோடு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அங்கு ரோட்டில் ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தவர் அதில் நிறைய ஆவணங்கள் இருந்ததால், தனக்கு படிக்க தெரியாததால் அதனை வீட்டில் வைத்துவிட்டார். வெளியூர் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய தன் மகன் அமல்ராஜிடம், 29ம் தேதி அதனை காண்பித்துள்ளார்.
உடனடியாக அமல்ராஜ், அவரது நண்பர் அற்புதராஜூடன், தன் தாயையும் அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு பூதலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒப்படைத்துள்ளார். அந்த பையில் சித்திரக்குடியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் வங்கி கணக்கு புத்தகம், ஆதார்கார்டு, பான் கார்டு, 7 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. இதையடுத்து பூதலுார் எஸ்.எஸ்.ஐ., காமராஜ், உடனடியாக விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்து, தவறவிட்ட பணத்துடன், ஆவணங்களையும் அவரிடம் ஒப்படைத்தனர். கீழே கிடந்த ஆவணங்களையும், பணத்தையும் எடுத்து, அதை நேர்மையாக ஒப்படைத்த சின்னம்மாளின் செயலை, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X