பொது செய்தி

தமிழ்நாடு

அரசியல் பிரதிநிதித்துவம்

Added : ஜூலை 31, 2019
Advertisement

மதுரை : 'கிறிஸ்தவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்,' என மதுரையில் நடந்த தமிழ்நாடு புதுச்சேரி செபி டயாசிஸ் பிஷப்புகள் கூட்டத்தில் அதன் தலைவர் நோவா யவனராஜ் வலியுறுத்தினார்.

அவர் மேலும் பேசியதாவது: சமீபகாலமாக தமிழகத்தில் திருச்சபை நடக்கும் போது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதுடன் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்திற்கு தேர்தல் கமிஷன் அங்கீகரித்த கிறிஸ்தவ அமைப்புக்களை அழைக்க வேண்டும். சிறுபான்மை வளர்ச்சி நிதியை அரசு முறையாக பயன்படுத்தவும், கிறிஸ்தவர்களுக்கு உரிய அரசியல் பிரநிதித்துவம் வழங்கவும் வேண்டும். இதுவரை மூடப்பட்ட திருச்சபைகளை திறக்க வேண்டும்.

மாவட்டங்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கல்லறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.பொதுச் செயலாளர்கள் ஸ்டீபன், மோகன்தாஸ், பொருளாளர் ஜான்சன், நிர்வாகி ஜோசப் ஜார்ஜ், சிறுபான்மை அரசியல் பிரிவு தலைவர் மேஷாக் ராஜா, பிஷப் டேனியல் மோசஸ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X