பொது செய்தி

இந்தியா

தொலைபேசி தொல்லை: தடுக்க வாய்ப்பு இல்லை

Updated : ஜூலை 31, 2019 | Added : ஜூலை 31, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி: 'கடன் தருவதாகக் கூறி, தொல்லை கொடுக்கும் தொலைபேசி அழைப்புகளை தடை செய்வது சரியாக இருக்காது' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


சமீப காலமாக, தொலைபேசி வாயிலாக, கடன் தருவதாக, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன. இந்நிலையில், இத்தகைய அழைப்புகளை தடை செய்வது குறித்த, ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுபாஷ் அகர்வால் என்பவர் கேள்விகள் எழுப்பியிருந்தார்.


நிராகரிப்பு:


இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, இவ்வாறு வரும் தொலைபேசி அழைப்புகளை தடை செய்வது என்பது சரியாக இருக்காது என, தெரிவித்துள்ளது. தொலைபேசி வாயிலாக கடன் வழங்கும், இத்தகைய நிறுவனங்களின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இவற்றை தடை செய்வது என்பது, தர்க்க ரீதியாக சரியானதாக இருக்காது. கடன் பெற விரும்புபவர், கடன் பெறுவதற்கு முன், அது குறித்த விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

தொலைபேசி அழைப்புகள் குறித்து மட்டுமல்லாமல், இத்தகைய நிறுவனங்களின் வட்டி விகிதங்களை சரி செய்வது, அவற்றுக்கு வங்கிகள் நிதியளிப்பதை தடை செய்வது உள்ளிட்டவை குறித்தும் சில பரிந்துரைகளை வழங்கி இருந்தார், சுபாஷ் அகர்வால்.ஆனால், ரிசர்வ் வங்கி, அவருடைய பரிந்துரைகளையும் நிராகரித்து விட்டது.


வியாபார உத்தி:


முன்தேதியிட்ட காசோலை அல்லது வங்கியின், 'ஆட்டோ எலெக்ட்ரானிக் கிளியரிங்' முறையின் அடிப்படையில், இந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மொபைல் போன் மூலமாக, பாதுகாப்பற்ற கடனுக்கான அனுமதியை வழங்குகின்றன. ஏதேனும் ஒரு காரணத்தால், கடன் பெற்றவர்கள், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என, அகர்வால் தன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இத்தகைய கடன் குறித்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதன் மூலம், கடனை திருப்பியளிக்க முடியாமல் போகும் கடன்தாரர்கள், தற்கொலை செய்து கொள்வது தடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: மொபைல் போன் மூலம் கடன் வழங்குவதாக தெரிவிப்பது என்பது, அந்நிறுவனங்களின் மார்க்கெட்டிங் மற்றும் வியாபார உத்தியாகும்.இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட திட்டங்கள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால், கடன் வாங்கச் சொல்லி இந்த நிறுவனங்கள் வற்புறுத்தினால், அது விவாதத்துக்கு உரியது.


சாத்தியமில்லை:


பாதுகாப்பற்ற கடன்கள் என்பதை பொறுத்தவரை, இந்த நிதி நிறுவனங்கள் மருத்துவ அவசரத்துக்கும், கல்வி மற்றும் திருமணத்துக்கும் கடன் வழங்குகின்றன. மற்ற கடன்கள், அளவில் மிகவும் சிறியதே.கடன் வாங்குபவர்களுக்கு, கடன்களை பெறுவதற்கான பாதுகாப்பை எப்போதும் வழங்குவது என்பது சாத்தியமில்லாதது. பாதுகாப்பாற்ற கடன்களுக்கான உண்மையான தேவையும் இருக்கவே செய்கிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பாதுகாப்பற்ற கடன்களை வழங்கும்போது, அவர்களின் எல்லையையும், கடன் பெறுவோருடைய தகுதியையும் அறிந்து, அதற்கேற்ப கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
31-ஜூலை-201913:35:00 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் //தொலைபேசி தொல்லை: தடுக்க வாய்ப்பு இல்லை// ஏன் இல்லை, தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் அனைத்திற்கும் வழி இருக்கிறது, ஒருமுறை DND ஆப் மூலம் ஒரு தனிநபர் நம்பர் பிளாக் செய்யப்பட்டால், அவரின் ஆதார் மூலம் வாங்கப்பட்ட அணைத்து எண்களும் பிளாக் செய்யப்படவேண்டும், மேலும் அடுத்த ஓராண்டிற்கு எந்த நிறுவனத்திடம் இருந்தும் அவருக்கு இணைப்பு கொடுக்க கூடாது, இந்த சட்டத்தை கொண்டுவாருங்கள், பிறகு எல்லாமே நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
31-ஜூலை-201908:30:00 IST Report Abuse
ஆப்பு எனக்கு போன் வந்தா, அவிங்க கிட்டே ஜாலியாப் பேசுவேன். 10 சதவீதம் வட்டி கேட்டா முடியாது 15 சதவீதம்னாத்தான் கடன் வாங்கிப்பேன்னு சொல்லுவேன். பொறவு கேஷாத்தான் கடன் பணத்தை வாங்கிப்பேன்னு சொல்லுவேன். அப்புறம் கடன் வாங்குற பழக்கம் உண்டு, ஆனா திருப்பி குடுக்கற வழக்கம் இல்லேன்னு சொல்லுவேன். நல்லா பொழுது போவும்.
Rate this:
Share this comment
Cancel
31-ஜூலை-201908:26:23 IST Report Abuse
ஆப்பு ஆ..ஊன்னா அமெரிக்கா அப்பிடீம்பாங்களே... அங்கே do not call list ல பதிஞ்சா கூப்பிட முடியாது தெரியுமா? அதுமாதிரி கடனைத் திருப்பி குடுக்க முடியலேன்னா கிரெடிட் பீரோக்களுக்கு தகவல் தான் குடுக்க முடியுமே தவிர ஆள் வெச்சு துன்புறுத்த முடியாது தெரியுமா...
Rate this:
Share this comment
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
31-ஜூலை-201910:34:24 IST Report Abuse
DSM .S/o PLM கடன் கொடுத்தவன் திருப்பி கேட்டால் கொடுக்காதவனை என்ன செய்து பணத்தை திருப்பி வாங்குவது... க்ரெடிட் பீரோக்களுக்கு தகவல் கொடுத்து விட்டால் போதுமா.. இதுதான் சரியான வழிமுறை என்றால் மல்லையா தப்பி ஓடியதை ஏன் விமர்சிக்கிறீர்கள்? தவறிழைத்த defaulters மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும், அதற்கு உண்மையான வழிமுறையென்ன என்பதை சூசகமாக நீங்களே சொல்லிவிட்டீர்கள்.. அதாவது, வாங்கிய விலைக்கு வந்து விட்டீர்கள்.. இங்கே சிலருக்கு தவறு செய்தவர்களை கன்னா பின்னா வென்று திட்டிவிட்டு, ஏதோ அதற்கெல்லாம் காரணம் மோடியென்று முடிப்பது ஒருவித நோய்.. மோடியை திட்டியது போன்ற ஒரு சந்தோசத்தை, ஒரு சிற்றின்பத்தை அவர்கள்அடைந்து கொள்கின்றனர்.. அத்துணை கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்கள் இங்குள்ள மோடி ஒயிகா கோஷ்டிகள்.....
Rate this:
Share this comment
31-ஜூலை-201913:32:27 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ஆப்பு, எப்பவுமே விஷயம் தெரியாமல் உளறிக்கொண்டிருக்கும் , DND நடைமுறையை கொண்டுவந்து பல ஆண்டுகள் ஆகிறது ஆனாலும் இது நிறுவனங்கள் பெயரில் நடக்கும் கால் செண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதனால் தற்போது அனைத்து கால்களும் தனிநபர் மொபைல் போன் மூலம் செய்கிறார்கள், DND ஆப் மூலம் பிளாக் செய்தும் பெரிய அளவில் பயனில்லை, ஏனென்றால் ஒவ்வொருமுறையும் புது நம்பரில் இருந்து கால் வரும், பஜாஜ் பினான்சில் இருந்து எனக்கு ஒரு மாதத்தில் பல தொல்லை அழைப்புகள் வருகிறது, நான் இதுவரை அந்த நிறுவனத்தில் இருந்து எந்த கடனும் வாங்கியது இல்லை, நம்முடைய கடன் வாங்கும் தகுதியை தெரிந்துகொண்டு (CIBIL score ) நம் விவரங்களை எடுத்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X