'காபி டே' நிறுவனர் சித்தார்த்தா உடல் கண்டெடுப்பு

Updated : ஜூலை 31, 2019 | Added : ஜூலை 31, 2019 | கருத்துகள் (94)
Share
Advertisement
பெங்களூரு: நாடு முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் வைத்துள்ள, 'கபே காபி டே' நிறுவனத்தின் தலைவர், தொழிலதிபர், வி.ஜி. சித்தார்த்தா, 58, உடல் 36 மணி நேர தேடுதலுக்கு பிறகு, மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.கடனால் திணறல்கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சித்தார்த்தா. கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்.,
காபி டே, நிறுவனர் ,சித்தார்த்தா, உடல் கண்டெடுப்பு

பெங்களூரு: நாடு முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்கள் வைத்துள்ள, 'கபே காபி டே' நிறுவனத்தின் தலைவர், தொழிலதிபர், வி.ஜி. சித்தார்த்தா, 58, உடல் 36 மணி நேர தேடுதலுக்கு பிறகு, மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.


கடனால் திணறல்


கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சித்தார்த்தா. கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்., முன்னாள் உறுப்பினரும், பா.ஜ.,வின் தற்போதைய உறுப்பினருமான, எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன். கடந்த, 1993ல், கபே காபி டே என்ற நிறுவனத்தை துவக்கினார். குடும்பத் தொழிலான, காபி கொட்டை ஏற்றுமதியில் ஈடுபட்ட வந்த அவர், நாடு முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை துவக்கி, கோலோச்சி வந்தார். கடந்த, 37 ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில் அவர், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளித்து வந்தார்; தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள், கடன்களால் திணறி வந்தார்.


மாயம்


நேற்று முன்தினம்( ஜூலை 29) மாலை, பெங்களூரில் இருந்து மங்களுருக்கு, சித்தார்த்தா, டிரைவருடன் காரில் சென்றார்.திடீரென, அங்குள்ள நேத்ராவதி நதியின் மீதுள்ள பாலத்தில் இறங்கிய அவர், நடந்து வருவதாகவும், பாலத்தின் மறுபக்கத்தில் காத்திருக்கும்படியும், டிரைவரிடம் கூறியுள்ளார். ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும், அவர் வராததால், மொபைல் போனில் தொடர்பு கொள்ள டிரைவர் முயற்சித்தார். ஆனால், சித்தார்த்தா மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது; குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தார். போலீசுக்கு தகவல் சென்றது.


latest tamil news





தேடுதல் தீவிரம்



மாயமான, தொழிலதிபர், சித்தார்த்தா, நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் வேட்டை துவங்கியது கடலோரக் காவல்படை. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


latest tamil news





சடலம் மீட்பு


இந்நிலையில், வி.ஜி. சித்தார்த்தா, 58, உடல் 36 மணி நேர தேடுதலுக்கு பிறகு, காலை 6.30 மணிக்கு மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.


தலைவர்கள் இரங்கல்


சித்தார்த்தா மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
04-ஆக-201911:40:00 IST Report Abuse
Bharatha Nesan காங்கிரஸ் அதிருப்தி MLA க்களுக்கு அவர்களின் பண ஆசையை சரிகட்ட இவரிடமிருந்து மிகுந்த அளவில் பணம் பெறப்பட்டு, பின்னர் ஆட்சி கவிழ்ந்ததும் அந்த பணத்தை அவருக்கு கொடுக்க முடியாததால் அவரை கூலிப்படையை ஏவி கொன்றிருப்பார்களோ?
Rate this:
Cancel
pu.ma.ko - Chennai,இந்தியா
31-ஜூலை-201919:47:47 IST Report Abuse
pu.ma.ko // நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் வேட்டை துவங்கியது கடலோரக் காவல்படை. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்// இங்கே தற்கொலை செய்துகொண்ட ஒருவனை சிரத்தையுடன் தேடுகிறார்கள்... என்ன ஒரு தேசம்...
Rate this:
Cancel
pu.ma.ko - Chennai,இந்தியா
31-ஜூலை-201919:47:33 IST Report Abuse
pu.ma.ko // நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், தேடுதல் வேட்டை துவங்கியது கடலோரக் காவல்படை. தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்// தற்கொலை செய்துகொண்ட ஒருவனை சிரத்தையுடன் தேடுகிறார்கள்... என்ன ஒரு தேசம்...
Rate this:
pu.ma.ko - Chennai,இந்தியா
01-ஆக-201920:23:25 IST Report Abuse
pu.ma.koசெய்துவிட்டாய்...
Rate this:
pu.ma.ko - Chennai,இந்தியா
09-ஆக-201919:46:15 IST Report Abuse
pu.ma.koஅட . நன்றி. குட் பை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X