பொது செய்தி

இந்தியா

மின்சாரம் தாக்கி தினசரி 30 இந்தியர்கள் பலி

Updated : ஜூலை 31, 2019 | Added : ஜூலை 31, 2019 | கருத்துகள் (10)
Advertisement
Electrocution, kills, Indians, மின்சாரம், இந்தியர்கள், பலி

புதுடில்லி: இந்தியாவில், மின்சாரம் தாக்கி தினமும் 30 பேர் பலியாவது, தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த புள்ளிவிவரத்தில், ஆண்டுதோறும், மின்சாரம் தாக்கி ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2015 ம் ஆண்டில், 9,986 பேர் மின்சாரம் தாக்கி பலியாகினர். இதில், ம.பி., மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தலா ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களை தடுக்க போதுமான அதிகாரிகளை பல மாநிலங்கள் நியமிக்கவில்லை. இதனால், பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.


கண்டு கொள்வது இல்லைமின்சாரம் தாக்கி, கடந்த 2011 ல் 8,945 பேரும், 2012 ல் 2,750 பேரும், 2013 ல் 10 ,218 பேரும், 2014 ல் 9,606 பேரும் 2015 ல், 9,986 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 2012-13 காலகட்டத்தில் உ.பி.,யில் 570 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஆனால், 2018-19 காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை இருமடங்காக 1,120 பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய சம்பவங்களை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது. பல்ராம்பூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 50 பள்ளிக்குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பானது போன்ற பெரிய சம்பவங்கள் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அதிக மின் அழுத்தம் கொண்ட வயர்கள் செல்லும் பள்ளிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க உபி. அரசு உத்தரவிட்டது. பள்ளிக்கு மேல் செல்லும் மின்வயர்கள், மோசமான மின்சார உள்கட்டமைப்புகளை மாற்ற அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. உ.பி.,யில் மட்டும் மின்சாரத்தால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த 7 ஆண்டுகளில் 5,700 ஐ கடந்தது.விதிமீறல்நிபுணர்கள் கூறுகையில், இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பு மற்றும் தரமான மின்சார சாதனங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு இல்லை. இரண்டு மின்சார கம்பங்களுக்கு இடையே 50 அடி இருக்க வேண்டும். மின்கம்பங்களின் உயரம் 18 அடி இருக்க வேண்டும். ஆனால், இந்த விதிகள் பின்பற்றுவது இல்லை. மின்சார கம்பங்கள் சரியாக நடப்படாதது, பராமரிக்கப்படாதது போன்ற காரணங்களால், காற்று வேகமாக வீசும்போது, மின்கம்பங்கள் சாய்வதால், பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக்கூறினர்.


தயக்கம்இது போன்று சம்பவங்களை தவிர்க்க, தரைக்கு அடியில் மின்சார வயர்கள் பதிக்கப்படும் திட்டம் தான் சிறந்தது. ஜெர்மனி, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த திட்டத்தை பின்பற்றுகின்றன. ஆனால், இதற்கு அதிக செலவாகும் என்பதால், இதனை செயல்படுத்த தயக்கம் காட்டுகின்றன. இந்தியாவில், அதிக மின் அழுத்தம் கொண்ட வயர்கள், அருகில் வீடு கட்டி குடியிருக்கின்றனர்.இது போன்ற நேரங்களில் அந்த வயர்களால், மின்சாரம் தாக்கியதில் கடந்த 2015 ல் ம.பி.,யில் 1,545 பேரும், மஹாராஷ்டிராவில் 1,361 பேரும், ராஜஸ்தானில், 1,066பேரும், உ.பி.,யில் 756 பேரும், ஆந்திராவில் 637 பேரும் உயிரிழந்துள்ளனர்.அலட்சியம்ம.பி.யில் 2016 ல் 1,708 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பொது மக்கள் மின்சார வயர்களில் இருந்து பாதுகாப்பான தூரம் தாண்டி வீடுகளை கட்டி குடியிருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். ராஜஸ்தானில், 2018 - 19 காலகட்டத்தில், மின்சாரம் தாக்கி 293 பேர் உயிரிழந்தனர். 108 பேர் காயமடைந்தனர். இதற்கு மின்சார நிறுவனங்களின் அலட்சியமே காரணம். இந்த ஆண்டு அங்கு, ஏப்ரல் மே மாதத்தில் மின்சாரம் தாக்கி 63 பேர் உயிரிழந்ததற்கும் அந்த நிறுவனங்கள் தான் காரணம் என பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
31-ஜூலை-201919:24:44 IST Report Abuse
Poongavoor Raghupathy DMK is the right Party to protest against Electricity because many people are dying due to presence of Electricity. NEET is to be abolished because some Students failed in this NEET exams and in the same way electricity must be abolished because many people are dying due to electricity accidents. DMK must now go and knock the doors of Courts to get rid of electricity and NEET. Electricity seems to be more dangerous than NEET because many people are dying in electrical accidents. What a marvelous service oriented Party DMK is. Tamilnadu people must only vote for DMK since they protest for the rights and safety of the people.
Rate this:
Share this comment
Cancel
Viswam - Mumbai,இந்தியா
31-ஜூலை-201917:55:35 IST Report Abuse
Viswam எந்த நாட்டுலயும் இல்லாத மாதிரி நம்ம இந்தியாவுல ஒரு வருஷத்துல ஏறக்குறைய ரோடு ஆக்சிடெண்டுல ஒன்றரை லக்ஷம் பேர் , ரயில் ஆக்சிடெண்டுல இருபத்து அஞ்சாயிரம் பேர், ஷாக் அடிச்சு ரெண்டாயிரத்து ஐநூறு பேர், செல்பி எடுக்கும்போது விபத்துல இருபது பேர் அப்படின்னு உயிர் பலி ஆவுது - கேக்கவே ரொம்ப பரிதாபமாக இருக்கு இதுல செல்பி மட்டும்தான் ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்புடறமாதிரி வகை. பாக்கி எல்லா கேசும் தானே போயி மாட்டினமாதிரி (தற்கொலை தவிர) இல்லை. ரயில் தடம்புரண்டோ , ஆளில்லாத லெவல் கிராசிங்குலேயோ, அல்லது பஸ் மலை சரிவில் விழுந்தோ, இல்லைனாக்க கரண்ட் ஒயர் அறுந்து ரோட்டுல கிடந்ததை மெதிச்சதுனாலயோ தான் ஜனங்க பலி ஆகறாங்க அரசாங்கமும் எல்லாவிதமான ஆக்சிடென்டுகளை குறைக்க முயற்சி செய்யவேண்டும். பொதுமக்களும் டிசிப்ளின் கடைபிடிக்கவேண்டும். அதுக்கும் மேல தலைவிதி மற்றும் கடவுள் விட்ட வழி வேற என்னசொல்லறது
Rate this:
Share this comment
Cancel
31-ஜூலை-201916:04:43 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் போராளிகள் ஓடியாங்க ஓடியாங்க, மின்சாரத்தை முழுமையாக நிறுத்தவேண்டும் , அணுஉலையும் , நிலக்கரி உலையும் வேண்டாம் , உயர் மின் கோபுரமும் வேண்டாம் என்று போராடினீர்கள் தற்போது மின்சாரத்தால் இவ்வளவு உயிர்கள் போகிறதாம் , உடனே இழுத்து மூடுங்கள் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் என்று பாஜக அரசிற்கு எதிராக போராட்டம் வெடிக்கட்டும் . ஏற்கெனவே ஹைட்ரொ கார்பன் மூலம் கிடைக்கும் பெட்ரோல் , டீசல் , மண்ணெண்ணெய் , சமையல் எரிவாயு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள் , இப்போது இதையும் மூடவையுங்கள் . இதனால் இன்னொரு பயனும் உண்டு ஏற்கெனவே நீங்கள் மூடிய ஸ்டெர் லைட்டில் இருந்து தாமிரம் மூலம் தயாராகும் மின்சார சாதனங்களும் பயன்படாது. இரட்டிப்பு மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X