பொது செய்தி

தமிழ்நாடு

கனி மார்க்கெட்டில் ஆடி விற்பனை அமோகம்

Added : ஜூலை 31, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு, கனி மார்க்கெட் ஜவுளிசந்தை வளாகம், 51 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்ட வணிக வளாகமாக கட்டப்படவுள்ளது. இதற்கான பணி தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மார்க்கெட்டில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் வார ஜவுளிச்சந்தை நேற்று கூடியது. வணிக வளாக கட்டடப்பணி நடக்கும் இடத்தை தவிர, மற்ற காலியிடத்தில், கடைகள் வைக்க மாநகராட்சி அனுமதித்தது. இதனால் அந்த இடத்தில் வியாபாரிகள் வரிசையாக கடை வைத்தனர். வழக்கத்தை விட கடைகள் குறைந்தாலும், ஆடி விற்பனை நன்றாக இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஈரோடு மாவட்ட ஜவுளி தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, கரூர், மதுரை, திருப்பூர் மாவட்ட வியாபாரிகளும், கனி மார்க்கெட்டில் கடை போடுகின்றனர். ஒவ்வொரு வாரமும், 650 முதல், 750 கடைகள் போடப்படும். வணிக வளாகம் கட்டுவதால், 600 கடைகளே நேற்று போடப்பட்டன. ஆனாலும், அம்மன் கோவில்களில் நடக்கும் ஆடிப்பண்டிகை விழாவால், மஞ்சள் சேலை விற்பனை சூடுபிடித்தது. மொத்தம், 60 சதவீதம் அளவுக்கு விற்பனை நடந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X