பொது செய்தி

தமிழ்நாடு

தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா: 10 அமைச்சர்கள் ஆக.,3ல் பங்கேற்பு

Added : ஜூலை 31, 2019
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே, ஓடாநிலையில், தீரன் சின்னமலை நினைவு மண்டப வளாகத்தில், ஆக.,3ல் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா, அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அன்று காலை, 7:00 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், தீரன் சின்னமலை சிலைக்கு கலெக்டர் கதிரவன் மாலை அணிவிக்கிறார். இதை தொடர்ந்து, அரசியல் கட்சியினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், மாலை அணிவிக்கின்றனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில், காலை, 10:00 மணிக்கு அரசு விழா நடக்கிறது. இதில் அமைச்சர்கள், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், கருப்பணன், சரோஜா, ராதாகிருஷ்ணன், ராஜு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அரசு துறை சார்பில் பல்வேறு துறையினரின் காட்சி அரங்கம் அமைக்கப்படுகிறது. மருத்துவ முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X