பொது செய்தி

தமிழ்நாடு

பர்கூர் அருகே புதிய, பெருங்கற்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு

Added : ஜூலை 31, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா குட்டூர் கிராமம் அருகே, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள், புதிய கற்கால, பெருங்கற்கால தொல்பொருட்களை சேகரித்துள்ளனர்.
இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: இங்கு, பல வகையான பானை ஓடுகள், பானை செய்யவும், மெருகேற்றவும் பயன்படுத்தும் சுடுமண் கட்டி, தட்டும் கருவிகள், ரசகோட்டப்பானை ஓடுகள், கறுப்பு பானை மூடிகள், நீண்ட பிடியுடன் கூடிய சிகப்பு பானை மூடிகள் கிடைத்துள்ளன. இதுதவிர, பலவித அலங்கார வேலைப்பாடு கொண்ட சிகப்பு பானை ஓடுகள், விலங்கின் எலும்பு துண்டுகள், புதிய கற்காலத்தை சேர்ந்த கல் கருவிகள், பருப்பு உடைக்கும் கல் கருவிகள், தானியம் அரைக்க பயன்படும் கருவிகள் போன்றவை களஆய்வில் புதிதாக கிடைத்துள்ளன. கடந்த, 2,500 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவிலேயே மிகப்பெரிய உருக்காலை செயல்பட்ட இடமாக, குட்டூர் இருந்தது என்பதை ஏற்கனவே அகழ்வாய்வில் அறியப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தொல்பொருட்கள், புதிய கற்கால பண்பாட்டின் தொடர்ச்சியாக, மக்கள் நேரடியாக பெருங்கற்காலத்துக்கு வந்துள்ள நிலையை வெளிக்காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X