காங்கிரஸ் தலைவராக பிரியங்கா? மேலிடம் தேர்வு செய்ய கோரிக்கை | Dinamalar

காங்கிரஸ் தலைவராக பிரியங்கா? மேலிடம் தேர்வு செய்ய கோரிக்கை

Added : ஆக 01, 2019 | கருத்துகள் (1)
Share
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, பிரியங்காவை, ௪௭, தேர்வு செய்ய வேண்டும் என, தமிழகத்தில் முதன் முதலாக, காங்கிரஸ் மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ் முன்மொழிந்துள்ளார். லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராகுல், ௪௯, ராஜினாமா செய்தார். ஆனால், அவர் தான் தலைவராக நீடிக்க வேண்டும் என, மூத்த தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் வலியுறுத்தி



காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக, பிரியங்காவை, ௪௭, தேர்வு செய்ய வேண்டும் என, தமிழகத்தில் முதன் முதலாக, காங்கிரஸ் மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ் முன்மொழிந்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து, ராகுல், ௪௯, ராஜினாமா செய்தார். ஆனால், அவர் தான் தலைவராக நீடிக்க வேண்டும் என, மூத்த தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஆகஸ்ட், 15ல், சுதந்திர தினத்தன்று, டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், கொடியேற்றும் விழா நடக்கும்; அதற்குள், கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா கூட்டத்தொடர், 7ம் தேதி முடிவடைந்ததும், 9 அல்லது, 10ம் தேதியில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதில், ராகுல் ராஜினாமாவை ஏற்பதா, புதிய தலைவராக பிரியங்காவை தேர்வு செய்வதா என, முடிவு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர், பீட்டர் அல்போன்ஸ் அளித்த பேட்டி:
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராகுலுக்கு மட்டுமே தகுதி உள்ளது. ஆனால், பதவியில் நீடிக்க முடியாது என, அவர் திட்டவட்டமாக கூறி விட்டார். தற்போது, மக்கள் மற்றும் தொண்டர்கள் விரும்பும், போர்க்குணம் மிக்க தலைவரை தேர்வு செய்ய வேண்டும். ராகுல், பிரியங்காவை தவிர, வேறு யாரை நியமித்தாலும், அவர்களை, மக்கள் புரிந்துகொள்ள, வெகு காலமாகும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, பிரியங்காவை மக்களுக்கு நன்கு தெரியும். அந்த வகையில் பார்த்தால், தற்போதைய சூழலில், பிரியங்காவே காங்கிரஸ் தலைவராக, முழு தகுதி படைத்தவர். பிரியங்கா வருகை தான், உயிரோட்டமாக இருக்கும்.
எனவே, பிரியங்காவை, தலைவராக தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பிரியங்காவுக்கு பெருகும் ஆதரவு
'ராகுலுக்கு பதிலாக, பிரியங்காவை, புதிய தலைவராக தேர்வு செய்ய வேண்டும்' என, சில மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர், பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங் போன்றோர், பிரியங்காவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். எனினும், பிரியங்கா இன்னும் தன் முடிவை உறுதியாக அறிவிக்கவில்லை. அதே நேரம், தலைவர் பதவியில், தொடரப் போவதில்லை என்பதில், ராகுல் திட்டவட்டமாக உள்ளார். நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X