சென்னை : 'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வீடுகளில் பயன்படுத்தினாலும், முதல் முறை, 500 ரூபாயும், அடுத்த முறைகளுக்கு, 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு, மக்கள்ஒத்துழைப்பு வழங்காததால், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக,அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தாண்டு, ஜன., 1 முதல், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி துாக்கி எறியக்கூடிய, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு தடை விதித்தது.அத்துமீறல்சென்னை மாநகராட்சியில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினர், இதுவரை, 264 டன் பிளாஸ்டிக் பொருட்களையும், அதை பயன்படுத்தியவர் களிடம் இருந்து, 42 லட்சம் ரூபாய்க்கு மேல், அபராதமும் வசூலித்துள்ளனர்.பொதுமக்கள் ஒத்து ழைப்பு அளிக்காததால், வியாபாரிகள் அத்துமீறுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், 'தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அரசு வகுத்துள்ள வழிமுறைகளின் படி, நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதன்படி, கடைகளுக்கு, 'சீல்' வைக்கவும், பொதுமக்கள், வீடுகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கவும், மாநகராட்சி அதிரடியாக முடிவு செய்துள்ளது.
அதற்கான பணிகளை தீவிரப்படுத்த, பிளாஸ்டிக் ஒழிப்புகுழுவினருக்கு, மாநக ராட்சி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.எவ்வளவு? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, உற்பத்தி செய்பவர்கள், முதன்முறை பிடிபடும் போது, 2 லட்சம் ரூபாயும், அடுத்த முறை, 5 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால், அந்த நிறுவனத்திற்கு, 'சீல்' வைக்கப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை சேமித்து வைத்தாலோ, வழங்கினாலோ அல்லது எடுத்துச் சென்றாலோ, முதல்முறை, 1 லட்சம் ரூபாய், இரண்டாவது முறை, 2 லட்சம் ரூபாய், அடுத்த முறை, வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை அல்லது வினியோகம் செய்தால், முதல்முறை, 50 ஆயிரம் ரூபாய், இரண்டாவது முறை, 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் வணிக ரீதியில் பயன்படுத்துவோருக்கு, முதல்முறை, 25 ஆயிரம் ரூபாய், மீண்டும் பிடிப்பட்டால், 50 ஆயிரம் ரூபாய், அபராதமாக விதிக்கப்படும்; வாகனமும் பறிமுதல் செய்யப்படும் சிறிய கடைக்காரர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால், முதல்முறை, 100 ரூபாய், இரண்டாவது முறை, 200 ரூபாய், மூன்றாவது முறை, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால், கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வீடுகளில் பயன்படுத்தினால், முதல் முறை பிடிப்படும் போது, 500 ரூபாய், அடுத்த முறைகளில், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். தனியாருக்கு விற்பனை!சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள, 262 டன் பிளாஸ்டிக் பொருட்கள், சிமென்ட் உற்பத்தி நிறுவனம் மற்றும் மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, கிலோ, 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், குப்பை கழிவுகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களும், தார் சாலை பயன்பாட்டுக்கு போக, மற்றவை, தனியார் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்யப்படு கிறது. இந்த தொகை, மாநகராட்சி கருவூலத்தில் சேர்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE