பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் ராணுவ படையில் தோனி

Updated : ஆக 01, 2019 | Added : ஆக 01, 2019 | கருத்துகள் (21)
Advertisement

ஜம்மு: இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் சேர்ந்துள்ளார்.






இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2011 முதல், இந்திய துணை ராணுவப்படையின் பாராசூட் பிரிவில் கவுரவ 'லெப்டினென்ட்' கர்னலாக உள்ளார்.




உலக கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிரிக்கெட்டில் இருந்து இரண்டு மாதம் விலகி ராணுவ சேவையில் ஈடுபட உள்ளார்.





இந்நிலையில், காஷ்மீரில் உள்ள 'விக்டர்' படையுடன் தோனி நேற்று(ஜூலை 31) இணைந்தார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீரில் அவர் பணியில் ஈடுபடவுள்ளார். ரோந்து செல்லுதல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார்.




Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
01-ஆக-201919:38:31 IST Report Abuse
agni புல்வாமா நடந்த போது ஒரு ராணுவவீரர் மிகவும் வேதனையோடு நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்யும் ராணுவம், ராணுவவீரர்கள் பற்றி விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்லவோ,தங்களை ஊக்குவிக்க யாருமில்லை என மீடியா,சினிமா,youtube ,சமூகவிலைத்தளங்கள் என அனைத்தையும் தாக்கி பேசியது பலருக்கு மறந்து விட்டது போல.டோனி இப்போது இராணுவ வீரர்களோடு பணியாற்றுவது அவர்களுக்கு உற்சாகமும் ,ஊக்கப்படுத்தும் விதமாக உள்ளது. பாராட்டத்தக்கது,காஷ்மீரில் மைனஸ் டிகிரி கடும் குளிரில்,கடுமையான சூழ்நிலையில் நம் வீரர்கள் எந்த வசதிகளுமின்றி தேச நலனுக்காக சுயநலமின்றி தங்கள் உயிரையும்,வாழ்நாட்களையும் தருகிறார்கள்,இத்தகைய தேச பணிக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று டோனி அங்கு பணியாற்றுகிறார்,நம் தேச ராணுவவீரர்களுக்கு நாட்டு மக்களாகிய அனைவரும் என்றும் மதிப்பளித்து துணைநிற்கவேண்டும் இது நம் கடமை.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஆக-201917:32:55 IST Report Abuse
இந்தியன் kumar வெஸ்ட் இண்டிஸ் தொடரில் இப்போது உள்ள கீப்பர் தனது பணியை சிறப்பாக செய்தால் ஓய்வு பெற்று விடுவார் , எதிலும் அவசரம் காட்டமாட்டார் எப்போதும் கூல் அதனால்தான் பல வெற்றிகளை குவித்தார்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
01-ஆக-201917:30:48 IST Report Abuse
இந்தியன் kumar எதை செய்தாலும் விமர்சனம் வர தான் செய்யும் , விமர்சனத்தை பற்றி கவலைப்படாமல் டோனி வழி தனி வழி என்று போய்க்கொண்டு இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X