உன்னாவ் பலாத்கார வழக்கு: டில்லிக்கு மாற்றம்

Updated : ஆக 01, 2019 | Added : ஆக 01, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
உன்னாவ், சிறுமி, பலாத்காரம், சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதி,

புதுடில்லி: உ.பி.,யின் உன்னாவ் மாவட்டத்தில், 17 வயது சிறுமியை பாஜ.,எம்எல்ஏ குல்தீப் சென்கார் பலாத்காரம் செய்த வழக்கு, உள்ளிட்ட இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் டில்லிக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பா.ஜ.,வைச் சேர்ந்த, நான்கு முறை, எம்.எல்.ஏ.,வான குல்தீப் சிங் சென்கார், 55 , கடந்த, 2017ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் புகார்கூறினார். சிறுமியின் தந்தை, போலீஸ் விசாரணையின் போது, அடித்துக் கொல்லப்பட்டார். சிறுமியின் பல உறவினர்கள் கைது செய்யப்பட்டதால், நாடு முழுவதும் அதிர்வலை ஏற்பட்டது. இந்த வழக்கில் எம்.எல்.ஏ., சென்கார் கைது செய்யப்பட்டார்.

ரேபரேலி சிறையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக, தற்போது 19 வயதாகும் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்டோர் சென்ற கார் மீது, மூன்று நாட்களுக்கு முன் லாரி மோதியது. இதில், அந்த பெண்ணின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர், படுகாயமடைந்தனர். இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, குல்தீப் சிங் சென்கார் மற்றும் ஒன்பது பேர் மீது, சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமி பலாத்கார வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் கூறினர். பிற்பகல் 12 மணியளவில், வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட்டனர். இதன்படி அதிகாரிகள் ஆஜரானார்கள்.


latest tamil news




தலைமை நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன என்ற கேள்விக்கு, அந்த பெண் சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சொலிசிட்டர் ஜெனரல் பதிலளித்தார்.

தொடர்ந்து, தலைமை நீதிபதி கூறுகையில், நாங்கள் மீண்டும் 2 மணிக்கு வந்து, உன்னாவ் தொடர்பான 5 வழக்குகள், மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வருவது குறித்து டாக்டர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றனர்.


மத்திய படை பாதுகாப்பு


தொடர்ந்து 2 மணியளவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிறுமி பலாத்காரம் தொடர்பான வழக்குகள் டில்லிக்கு மாற்றப்படுகிறது. தினசரி விசாரணை நடத்தி, 45 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். கார் மோதல் சம்பவத்தை 14 நாட்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த பெண், தாயார், வழக்கறிஞருக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
02-ஆக-201905:05:11 IST Report Abuse
TAMILAN இது தான் மோடி ஆட்சி.பெண்களுக்கு பாதுகாப்பு
Rate this:
Cancel
Manivannan.J - Chennai,இந்தியா
01-ஆக-201923:05:05 IST Report Abuse
Manivannan.J இங்கே பார்க்கும்போது ரியல் சூப்பர் ஹீரோக்கள் நீதிபதிகள் தான்......
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
01-ஆக-201922:38:14 IST Report Abuse
Babu பரவாயில்லையே, கருத்துக்களில் சமதர்மம் தெரிகின்றதே. தமிழன் தமிழன் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X