இந்தியரை கைது செய்த பாக்.,; மீண்டும் மூக்குடைப்புக்கு தயாராகிறது?

Updated : ஆக 01, 2019 | Added : ஆக 01, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தால் மூக்குடைபட்ட பாக்., இன்னும் திருந்தவில்லை. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, ராஜு லட்சுமணன் என்ற இந்தியரை பிடித்து வைத்துள்ளதாக அது கொக்கரித்துள்ளது.



latest tamil news



அண்டை நாடான பாகிஸ்தான், எல்லா விதங்களிலும், இந்தியாவின் சண்டை நாடாக விளங்குகிறது. சர்வதேச அமைப்புகளில், இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுப்பதையே, அந்நாடு வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த, கடற்படை முன்னாள் வீரரான, குல்பூஷன் ஜாதவ், 47, என்பவர், மேற்காசிய நாடான ஈரானில், சொந்த வேலையாக இருந்த போது, 2017ல் பாக்., உளவு அமைப்பினர் அவரை பிடித்து சென்றனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், உளவு பார்த்ததாக கூறி, அந்நாடு, ஜாதவுக்கு, மரண தண்டனை விதித்தது.


latest tamil news



அதை எதிர்த்து, இந்தியா சார்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. கடந்த மாதம், 17ல், தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 'குல்பூஷன் ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் அணுக ஏற்பாடு செய்ய வேண்டும்; அவருக்கு விதிக்கப்பட்டுள்ள, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது. தீர்ப்பு வழங்கப்பட்டு, இரண்டு வாரங்கள் கழிந்துள்ள நிலையில், குல்பூஷன் ஜாதவை, இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க, பாகிஸ்தான் நாளை(ஆக.,03) தான் ஏற்பாடு செய்ய உள்ளது. அதில் பாக்., எப்படி நடந்து கொள்கிறது என்பதை பொருத்து, இந்திய வெளியுறவுத்துறை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.


latest tamil news



இந்நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், அந்நாட்டிற்கு எதிராக உளவு சதியில் ஈடுபட்டதாக, ராஜு லட்சுமணன் என்ற இந்தியரை, பிடித்து வைத்து விசாரிப்பதாக, பாகிஸ்தான் இன்று(ஆக.,01) அறிவித்துள்ளது. இது, அந்நாட்டின் அத்துமீறலை காட்டியுள்ளது. பிடித்து வைத்துள்ளதாக, பாக்., கூறும் இந்திய நபர் பற்றிய விபரங்களை, அந்நாடு வெளியிடவில்லை. இதன் மூலம், பாக்., பிரதமர், இம்ரான் கான், நேர்மையானவர் போலவும், அமைதியை விரும்புபவர் போலவும், காட்டிக் கொள்வது நாடகம் தான் என்பதும் அம்பலமாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
02-ஆக-201912:54:56 IST Report Abuse
DSM .S/o PLM இந்தியாவிற்குள் உளவு பார்க்க பாகிஸ்தானுக்கு அங்கிருந்துயரையும் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. இங்குள்ள மார்க்கத்து மாணிக்கங்கள் காங்கிரஸ் கண்மணிகள், கம்யூனிஸ்டுகள், திராவிடர்கள் எல்லோரும் இருக்கின்றனர்..
Rate this:
Cancel
02-ஆக-201911:41:50 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் பாக்கிஸ்தான் உளவாளிகள் இந்தியாவில் உளவு பார்க்க வந்தால், இங்கே அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க நிறையப்பேர் தயாராக இருக்கிறார்கள். ஆனால், நம் இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் உளவு பார்க்கச் சென்றால், அங்கே மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
02-ஆக-201911:30:15 IST Report Abuse
Nallavan Nallavan அவர் உண்மையில் உளவாளியாக இருந்திருந்தால் அந்நாடு நடவடிக்கை எடுக்காதா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X