பதிவு செய்த நாள் :
அதிரடி!
இளம்பெண் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்..
வழக்கை 45 நாட்களில் முடிக்க கெடு

புதுடில்லி: உ.பி.,யில், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வால் பலாத்காரம் செய்யப்பட்ட, 19 வயது பெண் சென்ற கார் மீது, லாரியை மோதச் செய்து, கொல்ல முயன்ற வழக்கு உட்பட அனைத்து வழக்குகளையும், டில்லிக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் நேற்று, அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு, இடைக்கால நிவாரணமாக, 25 லட்சம் ரூபாயை, உ.பி., மாநில அரசு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

Unnao,rape,accused,MLA,Kuldeep Sengar,BJP,சுப்ரீம் கோர்ட்,அதிரடி


ஆட்சி, அதிகாரத்தில் இருப்போரால், சட்டத்தை எப்போதும் விலைக்கு வாங்க முடியாது என்பதை, உ.பி., விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் நிரூபித்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண், கையால் எழுதிய கடித்தை அடிப்படையாக வைத்து, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, உ.பி.,யின், பங்கர்மாவ் தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், குல்தீப் சிங் சென்கார், 55. இரண்டு ஆண்டுகளுக்கு முன், வேலை கேட்டு வந்த, அப்போது, 17 வயதாக இருந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்தார். நடந்ததை, வெளியே சொன்னால், கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதையும் மீறி, அந்தச் சிறுமி, குல்தீப் சிங் மீது கற்பழிப்பு புகார் கூறியதுடன், நடவடிக்கை எடுக்காத முதல்வர் வீடு முன், தன் பெற்றோருடன் தீக்குளிக்க முயற்சித்தார்.


சிறையிலடைப்பு:


இதையடுத்து, அந்த எம்.எல்.ஏ., மீது, 'போக்சோ' எனப்படும், கொடூர குற்றங்களில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும் மற்றும் குற்ற வாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கும், சட்டப்பிரிவில் வழக்கு தொடரப்பட்டது. பின், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவரின் அடியாட்களும், ஆதரவாளர்களும், கடந்த இரண்டாண்டுகளாக, அந்தப் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, தன் பெண் உறவினர்கள் இருவர் மற்றும் வழக்கறிஞருடன், உ.பி.,யின் ரேபரேலி நகரில், அப்பெண் காரில் சென்று கொண்டிருந்த போது. எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில், காரில் இருந்த, அந்த இளம்பெண்ணின் உறவினர்கள் இருவர் இறந்தனர்; அவரும், உடன் இருந்த வழக்கறிஞரும் படுகாயம் அடைந்து, லக்னோ நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது, 'பா.ஜ., - எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள், அந்த இளம்பெண் மீது நடத்திய கொலை முயற்சி' என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின; சி.பி.ஐ., விசாரிக்க கோரின. அதை ஏற்று, இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணையை துவக்கிய அந்த அமைப்பு, எம்.எல்.ஏ., உட்பட, 10 பேர் மீது, கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, எழுதிய சாதாரண கடிதத்தை, வழக்கின் மனுவாக எடுத்து கொண்ட தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, தீவிரமாக விசாரிக்க துவங்கியது. நேற்று மதியத்திற்குள், வழக்கு விபரங்களை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ., மற்றும் லக்னோ அரசு மருத்துவமனை டாக்டர்கள், உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி, நிலவரத்தை தெரிவித்தனர்.


மாற்றுங்க:


இதையடுத்து, தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், தீபக் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அடங்கிய அமர்வு, பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்:

* உ.பி.,யில் நடந்து வரும் இந்த வழக்குகளின் விசாரணைகள், உடனடியாக, டில்லிக்கு மாற்றப்பட வேண்டும்
* இளம்பெண் கற்பழிப்பு வழக்கை, 45 நாட்களுக்குள், சி.பி.ஐ., நடத்தி முடிக்க வேண்டும்

Advertisement

* இளம் பெண் மீது கார் மோதிய வழக்கை, ஒரு வாரத்தில் விசாரித்து, சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
* லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இளம்பெண் மற்றும் வழக்கறிஞரை, உடனடியாக, விமானம் மூலம் அழைத்து வந்து, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்
* பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, முதற்கட்டமாக, இடைக்கால நிவாரணமாக, 25 லட்சம் ரூபாயை, உ.பி., அரசு வழங்க வேண்டும்
* வழக்கின் விசாரணையை மாற்ற வேண்டும் என்றோ, வேறு எந்த விதமான கோரிக்கையையும், நீதிமன்றம் ஏற்காது
* இந்த உத்தரவுகள், எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை, சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உடல் நிலை ஸ்திரம்

உ.பி.,யின் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, இளம்பெண் மற்றும் அவரின் வழக்கறிஞரின் உடல் நிலை, நேற்று முன்தினம் வரை, மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், நேற்று முதல், ஸ்திரமாகியுள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், செயற்கை சுவாசம் அளிக்க, அந்த பெண்ணுக்கு 'வென்டிலேட்டர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு நேற்று, தலையில், 'சி.டி., ஸ்கேன்' எடுத்து பார்த்ததில், பெரிய அளவில் எந்த காயமும் இல்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், அவர்கள், எந்த நேரமும், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.


பா.ஜ.,விலிருந்து நீக்கம்

உ.பி.,யில், ௧௭ வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கார், கட்சியிலிருந்து, முன்னரே நீக்கப்பட்டு விட்டார் என, பா.ஜ., தலைவர்கள், பல நாட்களாக, 'கீறல் விழுந்த ரெக்கார்டு' போல, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி வந்தனர். ஆனால், நேற்று தான், அந்த, எம்.எல்.ஏ., - பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,இந்தியா
05-ஆக-201904:41:31 IST Report Abuse

thonipuramVijayஎன்கவுண்டரில் போட்டு தள்ள தகுதிவாய்ந்த MLA .... சீக்கிரம் கதையை முடிங்கடா ..... அதோட அந்த போலீஸ் ஸ்டேஷன்ல பொண்ணோட அப்பன அடிச்சி கொன்ன போலீஸ் ரௌடியைகளையும் சுட்டுத்தள்ளுங்க .....இல்லன்னா

Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-ஆக-201907:56:33 IST Report Abuse

skv srinivasankrishnaveniஎப்போது நடந்தாலும் தப்பேதான் ஏன் என்றால் என்னடா அவ்ளோகேவலமா பேப்பரை தொறந்தால் தினம் இந்தஇளவுகளே தான் கண்ணுலேபடறது குழந்தைமுதல் கிழவிகள் வரை பேதமே இல்லாமல் நாயாய் அலையும் கயவர்கூட்டம்களை குண்டாஸ்க்களை எல்லாம் ஒழிச்சுக்கட்டணும் குடாஸ்னு தெரிஞ்சால் உடனே சுட்டுத்தள்ளுங்க கூடவே இவனுக்களை வச்சு சோறும் மதுவும் கொடுத்து வளர்க்கும் vip க்களையும் சேர்த்து இப்போதான் இந்த அவலம் நெறைய வரது எதனால்

Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
02-ஆக-201921:01:25 IST Report Abuse

D.Ambujavalliஎப்படி, எப்படி, இந்த எம் எல் ஏ செய்த அக்கிரமத்துக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து அந்தப் பெண்ணுக்கு நிவாரணம் தர வேண்டுமா? இப்படி இன்னும் பத்து பேர் கிளம்பினால் பாதிக்கப்பட்டவருக்கெல்லாம் அரசு கஜானாவைக் கவிழ்து காலி செய்ய வேண்டுமா? இது என்னவகை நீதி

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X