காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 31 நாட்கள் சயன கோலத்தில் அருள்பாலித்து வந்த அத்தி வரதர், நேற்றிலிருந்து நின்ற கோலத்தில், அருள்பாலிக்கிறார். பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சயன கோலத்தில், 24 நாட்களும், நின்ற கோலத்தில், 24 நாட்களும் அத்தி வரதர் அருள் பாலிப்பார் என, அறநிலையத் துறை முன்பு தெரிவித்திருந்தது. ஆனால், பல காரணங்களால், 31 நாட்கள், சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர், நேற்று முதல் நின்ற கோலத்தில் உள்ளார். நேற்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாத பாடல்கள் ஒலிக்க சிறப்பு பூஜைகளுடன் நின்ற கோல தரிசனம் துவங்கியது.
நின்ற கோல அத்தி வரதரை தரிசிக்க அதிகாலை, 2:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிழக்கு கோபுரம் வெளியே குவிந்தனர். முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருப்போருக்கு, தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த வசதிகளைவிட, கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அவர்களை காத்திருக்க செய்து, வரிசையாக அனுப்ப, அண்ணா அவென்யூ மற்றும் வாழைத்தோப்பு என, இரு இடங்களில், தலா, 10 ஆயிரம் பேர் காத்திருக்கும் வகையில், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 2:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், சயன கோலத்தில், 24 நாட்களும், நின்ற கோலத்தில், 24 நாட்களும் அத்தி வரதர் அருள் பாலிப்பார் என, அறநிலையத் துறை முன்பு தெரிவித்தது. ஆனால், பல காரணங்களால், 31 நாட்கள், சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர், நேற்று முதல் நின்ற கோலத்தில்
உள்ளார். நேற்று காலை, 5:00 மணிக்கு, சுப்ரபாத பாடல்கள் ஒலிக்க, சிறப்பு பூஜைகளுடன் நின்ற கோல தரிசனம் துவங்கியது. நின்ற கோல அத்தி வரதரை தரிசிக்க, அதிகாலை, 2:00 மணி முதலே, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கிழக்கு கோபுரம் வெளியே குவிந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதல்:
முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருப்போருக்கு, தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. முன்பிருந்த வசதிகளைவிட, கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், அவர்களை காத்திருக்க செய்து, வரிசையாக அனுப்ப, அண்ணா அவென்யூ மற்றும் வாழைத்தோப்பு என, இரு இடங்களில், தலா, 10 ஆயிரம் பேர் காத்திருக்கும் வகையில், பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
7,500 போலீசார் குவிப்பு:
நிருபர்களிடம், கலெக்டர், பொன்னையா கூறியதாவது: நேற்று மட்டும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், அத்தி வரதரை தரிசித்திருப்பர். பக்தர்கள் பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில், 5,000 பேர் உள்ளனர். கூடுதலாக, 2,500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம், 7,500 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
அத்தி வரதரை தரிசிக்க வரும் வெளியூர் பக்தர்களிடம், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டண கொள்ளையில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரையடுத்து, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர். இதில், அதிக கட்டணம் வசூல் செய்த, மூன்று டாடா மேஜிக், நான்கு ஷேர் ஆட்டோக்கள், 102 ஆட்டோ ரிக்ஷா என, மொத்தம், 109 வாகனங்கள், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர், செந்தில்குமார் கூறியதாவது: அதிக கட்டணம் வசூல் செய்யும் வாகனத்தின் எண்ணை குறிப்பிட்டு புகார் தெரிவித்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். இதற்காக, 044 - 2726 1277 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
அறநிலையத் துறை அன்னதானம் வழங்க, முதல்வர், 1 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தார். இந்நிலையில், அன்னதான திட்டத்தை, காஞ்சிபும் செட்டி தெருவில், அறநிலையத் துறை செயலர், பணீந்திர ரெட்டி, நேற்று மாலை துவக்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: அத்தி வரதர் நன்கொடை திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் வரை பலரும் செலுத்தியுள்ளனர். அறநிலையத் துறை சார்பில், நாள்தோறும், 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவுள்ளோம். அறநிலையத் துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், தினமும், ஒரு லட்சம் பேருக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
பக்தர்களின் வசதிக்காக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின், நடமாடும் ஏ.டி.எம்., மையம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடமாடும், ஏ.டி.எம்., மையம், வரதராஜ பெருமாள் கோவில் அருகில், ரங்கசாமி குளம் பஸ் நிறுத்தத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, ஏ.டி.எம்., மையம் செயல்படும். காஞ்சிபுரம், கலெக்டர் அனுமதி உடன், இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், தங்களின் பண தேவைகளை, இதன் வாயிலாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பக்தர்கள் பாதுகாப்பு வசதிக்காக, மாவட்ட நிர்வாகம், பல ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில், பெரிய கட்டடங்களில் ஏற்படும் தீ விபத்து மற்றும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு அதி நவீன மீட்பு வாகனம், சென்னையில் பயன்பாட்டில் உள்ளது. அந்த வாகனம், அத்தி வரதர் வைபத்திற்காக, நேற்று முன்தினம் இரவு, காஞ்சிபுரம் வந்தது. இந்த வாகன மூலம், 54 மீட்டர் உயரமுள்ள பல மாடி கட்டடங்களில் தீ ஏற்பட்டால், அவற்றை அணைக்க முடியும். அங்கு சிக்கியுள்ளோரை விரைவில் மீட்க முடியும். இந்த வாகனம், காந்தி சாலை தேரடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வி.ஐ.பி., நுழைவாயிலில், 'பாஸ்' உள்ளவர்களை மட்டுமே, போலீசார் நேற்று அனுமதித்தனர். அதனால், எந்த பிரச்னையும் இல்லாமல், பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. இதேபோல், வைபவ இறுதி நாளான, ஆக., 17ம் தேதி வரை, போலீசார் பின்பற்ற வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தரிசனத்தில், அத்தி வரதரின் வலது கையில் பொறிக்கப்பட்டுள்ள, 'மா சு ச:' என, மூன்று எழுத்துகளை பார்த்த பக்தர்கள், அதன் அர்த்தம் புரியாமல் குழம்பினர். மா சு ச: எழுத்துகள் குறித்து, கோவில் செயல் அலுவலர், தியாகராஜனிடம் கேட்டபோது, ''என்னை சரணடை; உனக்கு மோட்சம் தருவேன் என, பொருள் தரும். இந்த எழுத்துகள், கீதை உபதேசத்தில் உள்ளன,'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (5)
Reply
Reply
Reply