பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் 28 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

Updated : ஆக 02, 2019 | Added : ஆக 02, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
காஷ்மீரில் 28 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்திற்கு கூடுதலாக 28 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. சட்டம் ,ஒழுங்கை காப்பாற்ற பாதுகாப்பு நடவடிக்கைக்காக சமீபத்தில் 10ஆயிரம் துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 35ஏ மற்றும் 370-வது பிரிவு நீக்கப்படலாம் என பேசப்படும் நிலையில் நேற்று கூடுதாக கம்பனெிகள் படைப்பிரிவைச் சேர்ந்த 28 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


latest tamil news
இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதையடுத்து 28,000 வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் காஷ்மீரின் முக்கிய வழிபாட்டு தலங்கள், கோர்ட்டுகள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
02-ஆக-201916:42:07 IST Report Abuse
ganapati sb தமிழகத்தில் அகத்தியர் போல கஸ்யபர் என்ற முனிவர் தவம் செய்த இடம் காஸ்யபபுரம் என்ற காஸ்மீரம் . தமிழகத்தில் இந்தியாவின் 12 ஜ்யோதிர்லிங்களில் ஒன்றான ராமேஸ்வரம் போல காஸ்மீரில் அமர்நாத் ஜ்யோதிர்லிங்க தலங்களில் ஒன்று. தமிழகத்து காமாட்சி மீனாட்சி போல காஸ்மீரத்து வைஸ்ணவ தேவி பிரசித்தம். தமிழகத்து சைவம் போல காஸ்மீர சைவம் மிகவும் பிரசித்தம் . அகண்ட பாரதத்தின் ஆப்கான் பாகிஸ்தானை வங்கதேசத்தை அகரமித்த அரபிய அடிமைகள் கூட்டம் காசுமீரையும் ஆக்கிரமிக்க விடக்கூடாது . உறுதி மிக்க அமித்சா மோடி ஜோடி 370 35A ஐ நீக்காமல் வேறு எவர்தான் இதை நீக்குவார் . நன்றே செய்க அதை இன்றே செய்க .
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
02-ஆக-201916:23:32 IST Report Abuse
இந்தியன் kumar வன்முறையை ஒடுக்க ராணுவத்தை அதிக அளவில் குவித்து அமைதி நிலைப்படுத்துவதே சரியான நடைமுறை,
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
02-ஆக-201916:22:01 IST Report Abuse
இந்தியன் kumar இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சம உரிமை பெற்று இருக்க வேண்டும் ஜம்மு காஷ்மீரும் அப்படிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X