பொது செய்தி

இந்தியா

பாக்.,கிற்கு அமெரிக்க விமானம்: இந்தியா கோபம்

Updated : ஆக 02, 2019 | Added : ஆக 02, 2019 | கருத்துகள் (41)
Advertisement

புதுடில்லி : அமெரிக்க அதிபர் டிரம்ப், பாக்., பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு நடந்த அடுத்த நாளே, 125 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்-16 ரக போர் விமானத்தை பாக்.,கிற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக பென்டகன் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.






அதிநவீன திறன் கொண்ட போர் விமானமான எப் 16 ஐ, பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய உள்ளதாக ஜூலை 26 அன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரத்தை டில்லியில் உள்ள அமெரிக்க தூதரிடம் கொண்டு சென்றுள்ளோம். அத்துடன் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் மூலம் அமெரிக்க அரசிடமும் நமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம் என்றார்.




பாக்.,க்கு தொடர்ந்து தொழில்நுட்ப சேவைகளில் ஆதரவு தர உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளிடையே ஒப்பந்தமும் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாக்., விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஒருபுறம் கூறி வரும் டிரம்ப், மற்றொரு புறம் பாக்.,க்கு ராணுவ உதவி செய்வதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்தியாவின் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.




Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
02-ஆக-201921:08:02 IST Report Abuse
Arachi மத்தவர்களுக்கும் அறிவு உண்டு என்பதை இப்போதாவது மோடி உணரவேண்டும்.இதன் மூலம் தற்பெருமையாவது குறையும். அடுத்தவர்களை under estimate பண்ணக்கூடாது என்பதை இப்போதாவது புரிஞ்சிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-201919:57:25 IST Report Abuse
r.sundaram இதுவும் நல்லதுதான். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான் தற்போது வாங்கும் விமானங்களுக்கும் பைசா கொடுக்க வேண்டும். கடன் வாங்கினால் அதற்க்கு வட்டி கொடுக்க வேண்டும். இதனால் அதன் பொருளாதாரம் இன்னமும் சரியும். மீட்க முடியாத வரையில் சரிந்தால் அடுத்த சோமாலியா பாகிஸ்தான்தான். ஆதலால் இந்த எப் பதினாறு பற்றி நாம் கவலைப்படுவதை விடுத்து சந்தோஷப்படுவோம். அந்தக்காலத்தில் அவர்கள் விட்டுவிட்டு போன பேட்டன் டாங்கியை கைப்பற்றி நாம் அவர்களையே திருப்பி அடிக்க வில்லையா? எதற்கும் கவலைப்பட கூடாது. இனிமேல் பாகிஸ்தானுடன் போர் என்றுவந்தால், அது கைப்பற்றி வைத்திருக்கும் காஷ்மீர் பகுதி நமது ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
02-ஆக-201919:20:43 IST Report Abuse
Rohin காசு கொடுக்க மாட்டானுங்க அப்புறம் உங்க நாட்டு மேலேயே குண்ட போடுவானுங்க, நீங்க கொடுத்த விமானத்த உங்க ஏவுகணைய கொண்டே சுடரமாதிரி ஆயிரு பாத்துக்குங்க, எதுக்கு நல்ல யோசனை பண்ணி முடிவெடுங்க, எங்களுக்கு ஒன்னு பிரச்சன இல்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X