அரசு செலவில் 'டூர்': ஜெகனுக்கு கெட்ட பேர்!

Updated : ஆக 02, 2019 | Added : ஆக 02, 2019 | கருத்துகள் (50)
Share
Advertisement

2 ஐதராபாத் : முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இஸ்ரேல் செல்வதற்காக ஆந்திர அரசு ரூ.22.5 லட்சம் ஒதுக்கி உள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதல்வராக பதவியேற்ற 62 வது நாளிலேயே சர்ச்சையில் சிக்கி உள்ளார் ஜெகன்.



latest tamil news


ஆந்திர முன்னாள் முதல்வரும், ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையுமான ராஜசேகர ரெட்டி ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமிற்கு செல்வது வழக்கம். தற்போது தந்தையின் வழியை பின்பற்றி, 4 நாள் பயணமாக குடும்பத்துடன் இஸ்ரேல் சென்றுள்ளார் ஜெகன் மோகன்.
முதல்வராக பதவியேற்ற பிறகு அவர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இது. இஸ்ரேலில் பல்வேறு புனித தலங்களுக்கும் ஜெகன் செல்ல உள்ளார்.
ஆக.,1 முதல் 4 வரை ஜெகன் ஜெருசலேம் செல்வார் என ஜூலை 26 அறிவிக்கப்பட்டது. அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ரூ.22,52,500 ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கையில் வெளியிடப்பட்டது. இவரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 2 நாட்களுக்கு முன்பே போலீஸ் அதிகாரிகள் சிலர் இஸ்ரேல் சென்றுள்ளனர்.


latest tamil news



ஜூன் 26 ம் தேதி வெளியிடப்பட்ட அரசு உத்தரவில், ஜெகனின் பாதுகாப்பை பலப்படுத்த ரூ.1.89 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஜூன் 25 வெளியிட்ட உத்தரவில் ஜெகனின் வீட்டிற்கு செல்லும் பாதையை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஜூலை 22ல் பஞ்சாரா மலைப்பகுதியில் அமைந்துள்ள ஜெகனுக்கு சொந்தமான தாமரை குளத்திற்கு பாதுகாப்பு தர ரூ.24.5 லட்சமும் ஒதுக்கப்பட்டது.


latest tamil news


மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, போராட்டம் நடத்தி, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானவர் ஜெகன் மோகன். ஆந்திர அரசு ஏற்கனவே நிதிச்சுமையில் இருக்கும் போது முதல்வராக பதவியேற்றது முதல் மக்கள் பணத்தை தனிப்பட்ட விஷயங்களுக்காக வாரி இறைத்து வரும் ஜெகனை பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Prabakaran - Chennai,இந்தியா
06-ஆக-201907:06:40 IST Report Abuse
G.Prabakaran ஜெகனின் அப்பா சாமுவேல் ராஜசேகர் ரெட்டியே மிக பெரிய ஊழல் வாதி தான் அவர் மகன் அவர் அடித்த கொள்ளையை விட இன்னும் அதிகம் நிச்சயம் அடிப்பார் அடுத்த தேர்தலில் அவர் நிச்சயம் தோல்வியை தழுவுவார்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
03-ஆக-201911:46:41 IST Report Abuse
narayanan iyer அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் . முதல்வருக்கு எதற்கு பாதுகாப்பு? மக்களுக்கு பணியாற்ற வந்தவருக்கு மக்களே பாதுகாப்பு .
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
03-ஆக-201911:42:25 IST Report Abuse
narayanan iyer அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X