சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரியில் 5 கோவில்களில் தொடர் கொள்ளை

Added : ஆக 02, 2019
Advertisement

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ஒரு நாள் இரவில் 5 கோவில்களில் நடந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோவில் உண்டியல் உடைப்பு மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நேற்று (2ம்தேதி) இரவு சுசீந்திரம் அருகே கோவில்விளை பகுதியில் முத்தாரம்மன் கோவில் சிலையில் இருந்து நகை மற்றும் தங்க காசுகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருநகர் பகுதியில் பாலமுருகன் கோவில், புல்லுவிளை பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் அதே பகுதியில் முத்தாரம்மன் கோவில், ஈத்தாமொழி அருகே கேசவன்புதூர் நாராயணசாமி கோவில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன
ஒருநாள் இரவில் அடுத்தடுத்து 5 கோவில்களில், இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த போலீசார், சி.சி.டி.வி., பதிவுகள் மற்றும் தடயங்கள் மூலம் கொள்ளையர்கள் குறித்து விசாரிக்கின்றனர். தொடர்ந்து கோவில்களில் நடக்கும் கொள்ளை மற்றும் முயற்சிகள் குறித்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இரவு நேரங்களில் வழக்கமான போலீஸ் ரோந்து பணி தற்போது இல்லாததே கொள்ளை சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X