சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 செவிலியர் உட்பட 5பேர் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 02, 2019 | கருத்துகள் (2)
Advertisement

திருவாரூர் ;திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தவறான சிகிச்சையால் பெண் இறந்ததையடுத்து, செவிலியர் மூன்று பேர் உட்பட, 5பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, திருக்களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாதேவன், 35; இவரது மனைவி பவிதா,30. இவருக்கு, கடந்த 24ம் தேதி, குடவாசல் அரசு மருத்துவமனையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன், பவிதா உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

அன்றைய தினமே, மேல் சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பவிதா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அவர் இறந்தார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால், பவிதா இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, பணியில் இருந்த செவிலியர்கள் மூன்று பேர், ஊழியர்கள் இருவர், என, 5பேரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KALAPPAL KV SENTHIL MUSCAT - muscat,இந்தியா
28-ஆக-201909:50:28 IST Report Abuse
KALAPPAL KV SENTHIL MUSCAT தயவுசெய்து செய்தியை மாற்றுங்கள்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஆக-201918:08:13 IST Report Abuse
D.Ambujavalli சிகிச்சையளித்த மருத்துவரைப் பற்றி பேச்சே இல்லையே மருத்துவர் வழிகாட்டலின்றியே இவர்கள் சிகிச்சை அளித்தார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X