சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து இழப்பீடு வழங்காதஇரண்டு அரசு பஸ்கள் ஜப்தி

Added : ஆக 02, 2019
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் விபத்து இழப்பீடு வழங்காத இரண்டு அரசு பஸ்களை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர்கள் பூராசாமி மனைவி கவுரி, 62, செல்வம் மனைவி தமிழரசி, 42. இருவரும், கடந்த 2016, நவம்பர், 28ம் தேதி, சேத்தியாத்தோப்பில் இருந்து விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.குமாரமங்கலம் - கோ.ஆதனுார் இடையே பஸ் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது. அதில், கவுரி, தமிழரசி இருவரும் படுகாயமடைந்து, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.கடந்த ஜனவரி, 24ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், விபத்து ஏற்படுத்திய விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை நிர்வாகம், இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.ஆனால், பணிமனை நிர்வாகம் இழப்பீடு வழங்காததால், கடந்த மார்ச் 8ம் தேதி, நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, விபத்தில் காயமடைந்த இருவருக்கும் வட்டியுடன் சேர்த்து, தலா 31 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயசூர்யா உத்தரவிட்டார். அப்போதும் இழப்பீடு வழங்கப்படவில்லை.இழப்பீடு வழங்காத விழுப்புரம் கோட்ட அரசு பஸ்களை ஜப்தி செய்யுமாறு, ஜூலை 19ம் தேதி, முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூர்யா உத்தரவிட்டார்.அதன்பேரில், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றுனர்கள் காசிநாதன், செல்வம், வழக்கறிஞர் விஸ்வநாதன் ஆகியோர், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 அரசு பஸ்களை நேற்று ஜப்தி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X