சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியேரியில் அளவுக்கு மீறி கிராவல் எடுப்பு, தாசில்தார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Added : ஆக 02, 2019
Advertisement

வேப்பூர்: வேப்பூர் பெரியேரியில் அளவுக்கு மீறி கிராவல் எடுக்கும் பணியை, தாசில்தார் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.வேப்பூர் ஊராட்சிக்கு சொந்தமான பெரியேரி, 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு, வண்டல் மண் எடுக்க சிலர் நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் அனுமதி பெற்றனர். அதில், ஒரு நாள் மட்டும் 30 டிப்பர் லாரி வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.அதே போல், ௨ ஜே.சி.பி., மற்றும் ௮ டிராக்டர் டிப்பர்களில், சொந்த அலுவலுக்கு, கிராவல் மண் எடுக்க வேப்பூர் தாசில்தாரிடம் அனுமதி கோரினர். இதில், சமமான அளவில் மூன்று நாட்களுக்கு, 270 டிப்பர் லாரி மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று நல்லுார் பொறியாளர் மணிவேல் பெரியேரியை பார்வையிட்டார். அப்போது, வண்டல் மண்ணுக்கு பதிலாக, கிராவல் எடுப்பதையும், அனுமதிக்கப்பட்டதை விட அதிக ஆழத்தில் எடுப்பதையும் கண்டு, தாசில்தாரிடம் புகார் தெரிவித்தார்.வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல், கிராவல் மண் அதிக ஆழத்தில் எடுப்பதை அறிந்து, ஏரியில் கிராவல் மண் எடுப்பதை தடுத்து, வழங்கிய அனுமதியை ரத்து செய்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இது குறித்து நல்லுார், பொறியாளர் மணிவேல் கூறுகையில், 'ஒன்றிய அலுவலகத்தில் வண்டல் மண் எடுக்கவும், தாசில்தாரிடம் கிராவல் மண் எடுக்கவும் அனுமதி பெற்றனர். ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தொடர்ந்து கிராவல் மண் எடுத்து 10 அடிக்கும் அதிகமாக ஆழத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இதனால், மழைநீர் ஏரியை வந்தடைவதில் சிக்கல் ஏற்படும். இனி பெரியேரியில் கிராவல் மற்றும் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கபட மாட்டாது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X