சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொடரும் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம்

Added : ஆக 02, 2019
Advertisement

பெண்ணாடம்: தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வழங்காத அம்பிகா சர்க்கரை ஆலையை கண்டித்து, கொடிகளம் கிராம மக்கள் 5ம் நாளாக கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்ணாடம் அடுத்த இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 12 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை.இதை கண்டித்து, கடந்த 29ம் தேதி கிராம மக்கள் சார்பில், தொழிலாளர்களுக்கு ஆதரவாக கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் துவக்கப்பட்டது. அதில், 5ம் நாளான நேற்று, கொடிகளம் கிராம மக்கள் சார்பில், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கஞ்சி வழங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இறையூர், கூடலுார், பெ. பொன்னேரி, பெண்ணாடம், கொடிகளம் கிராம மக்கள், ஆலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X