சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டுமனை தகராறு சகோதரர்கள் கைது

Added : ஆக 02, 2019
Advertisement

செஞ்சி: வீட்டுமனை தகராறில் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.செஞ்சி அடுத்த கோணை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜி, 65; இவருக்கும் இவரது தம்பி மணி, 60; க்கும் வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக ஊரில் திருவிழா நடந்த போது மணியின் வீட்டு வழியாக சுவாமி ஊர்வலம் செல்வதை நடராஜி தடுத்துள்ளார்.இதனையறிந்த மணி குடும்பத்தினர் நடராஜின் மனைவி தனலட்சுமி, 60; மகள் சந்திரலேகா, 35; ஆகியோரை தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 12 பேர் மீது வழக்குப் பதிந்து மணி, நடராஜி ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X