சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை தாக்கிய கணவர் கைது

Added : ஆக 02, 2019
Advertisement

தியாகதுருகம்: வடதொரசலுார் கிராமத்தில் ஜீவனாம்சம் பணத்தைக் கேட்ட மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் அடுத்த வடதொரலூர் கிராமம், ரீட்டா நகரைச் சேர்ந்தவர் சங்கர், 37; இவரது மனைவி குமாரி, 30; இவர்களுக்கு சந்தோஷ், 11; என்ற மகனும், மதுமிதா, 12; சர்மிளா, 8; ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சங்கரை விட்டுப்பிரிந்து, குமாரி தனியாக வசித்து வருகிறார்.மேலும், கோர்ட்டில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். மாதம் 5000 ரூபாய் குமாரிக்கு, சங்கர் தர வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த மாதம் தர வேண்டிய பணத்தை சங்கர் கொடுக்கவில்லை. இதைக் கேட்டபோது சங்கரும் அவரது தாய் அஞ்சலை, 58; உறவினர் நிஷா, 28; ஆகிய மூவரும் சேர்ந்து குமாரியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து குமாரி கொடுத்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X