சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்நடை டாக்டர் வராததை கண்டித்து மாடுகளை சாலையில் நிறுத்தி போராட்டம்

Added : ஆக 02, 2019
Advertisement

தியாகதுருகம்: தியாகதுருகம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு டாக்டர் வராததை கண்டித்து மாடுகளை சாலையில் நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.தியாகதுருகம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் டாக்டர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இங்கு பணியில் இருந்த டாக்டர் பகத்சிங் கடந்த வாரம் பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்டம் சென்றார்.செம்பியன்மாதேவி கால்நடை மருத்துவமனை டாக்டர் நவீன்குமார் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தினமும் காலை செம்பியன்மாதேவி மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து விட்டு அதன் பின்னர் தியாகதுருகம் வருவது வழக்கம்.நேற்று காலை 9:50 மணி வரை மருத்துவமனைக்கு டாக்டர் வரவில்லை. உதவியாளரும் இல்லாததால் கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்த விவசாயிகள் ஆத்திரமடைந்தனர்.இதனால், தங்களின் மாடுகளை பேரூராட்சி அலுவலகம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி டாக்டர் நவீன் குமாரை உடனடியாக வரவழைத்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X