சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பை தயாரித்த ஆலைகளுக்கு 'சீல்': மின் இணைப்பும் துண்டிப்பு

Added : ஆக 03, 2019
Advertisement

கோவை:தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த, 5 ஆலைகளுக்கு கோவை கலெக்டர் உத்தரவுபடி, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்; மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பொதுமக்கள், கடை உரிமையாளர்கள், உற்பத்தி செய்யும் நிறுவன உரிமையாளர்களுக்கு, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.'தடையை மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, அரசு தரப்பில் கடும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. எனினும், கோவை மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு இருப்பதாக, கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.தீவிர ஆய்வு நடத்தி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து, தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, உள்ளாட்சித்துறை, உணவு பாதுகாப்புத்துறையினருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
ரெய்டு நடத்திய அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்ததாக, பொள்ளாச்சி தாலுகாவில் 2 நிறுவனங்கள், பேரூர் தாலுகாவில் 2 நிறுவனங்கள், கோவை தெற்கு தாலுகாவில் ஒரு நிறுவனம் என ஐந்து நிறுவனங்களுக்கு, 'சீல்' வைத்ததுடன், அவற்றுக்கான மின் இணைப்பையும் துண்டித்தனர்.'அரசின் தடையுத்தரவை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்ர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X