சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறலுக்கு ரூ.64 ஆயிரம் அபராதம்

Added : ஆக 03, 2019
Advertisement

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் விதி மீறல் வாகனங்கள் அதிகரித்து வருவதாக தொடர் புகார் வந்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜேஸ்மின் மெர்சி கமலா தலைமையில் அதிகாரிகள் அன்னப்பராஜா பள்ளி அருகே செக் போஸ்ட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கப்பட்ட இரண்டு ஆட்டோக்கள், லோடு ஏற்றி செல்லும் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். அதிக ஹார்ன் சப்தம் பயன்படுத்தியதற்காக ஆறு தனியார் பஸ்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கினர். போக்குவரத்து விதிகளை பின்பற்றாத பல்வேறு காரணங்களுக்காக வாகனங்களுக்கு ரூ.64ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.இரவு நேர விபத்துகளை தவிர்க்கும் விதமாக வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X