மொபைலுக்கு வந்த தகவலால் கணக்கில், ரூ.1.22 லட்சம் மாயம்

Added : ஆக 03, 2019
Advertisement

ஐதராபாத்:மொபைல் போனுக்கு வந்த தகவல் இணைப்பை, 'கிளிக்' செய்த வியாபாரி ஒருவரின், வங்கி கணக்கிலிருந்து, 1.22 லட்சம் ரூபாய் மாயமானது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கம்மம் மாவட்டம், பெனுபாலி மண்டலத்தை சேர்ந்தவர், சத்திய நாராயணா.கடந்த, 31ல், இவரது மொபைல் போனுக்கு, ஒரு தகவல் வந்தது. அந்த தகவலில், ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த இணைப்பை, சத்திய நாராயணா, 'கிளிக்' செய்தார். அடுத்த நிமிடம், அவரது வங்கி கணக்கிலிருந்து, 99 ஆயிரம் ரூபாய், எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்திய நாராயணா, சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகளை, மொபைலில் தொடர்பு கொண்டு பேசினார்.பேசிக் கொண்டிருந்த போதே, மேலும், 23 ஆயிரம் ரூபாய், அவரது வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது. இதை பார்த்த சத்திய நாராயணா பெரும் அதிர்ச்சிஅடைந்தார்.மொத்தம், 1.22 லட்சம் ரூபாய், சத்திய நாராயணாவின் வங்கி கணக்கிலிருந்து மாயமானது.
இது பற்றி, போலீசில், சத்திய நாராயணா புகார் செய்தார்,போலீசார் வழக்கு பதிவு செய்து, சத்திய நாராயணாவுக்கு மொபைலில் தகவல் அனுப்பியது யார்; எங்கிருந்து அனுப்பப்பட்டது, எந்த வங்கி கணக்குக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது என, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X