சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 இடத்தில் பைக் திருடிய ஆசாமிக்கு 9 ஆண்டு சிறை

Added : ஆக 03, 2019
Advertisement

கோவை:கோவையில் பல்வேறு இடங்களில் பைக் திருடிய ஆசாமிக்கு, மூன்று வழக்கில், ஒன்பது ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவையில், காட்டூர், சரவணம்பட்டி, பீளமேடு பகுதியில், 2017- 18ல், பொது இடங்களில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், தொடர்ச்சியாக திருட்டு போனது.
தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்த ரசூல் முகைதீன்,41, பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.திருடிய பைக்கை, அவரது நண்பர்கள் இசக்கிபாண்டியன், துரை உதவியுடன், திருநெல்வேலியில் விற்றது தெரிய வந்தது. மூன்று பேரும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
17 இடத்தில் பைக் திருடியதாக, ரசூல் முகைதீன் மீது, மூன்று போலீஸ் ஸ்டேஷன்களில், தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவர்கள் மீதான வழக்கு விசாரணை, ஜே.எம்:2, கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் ஞானசம்பந்தம், குற்றம் சாட்டப்பட்ட ரசூல் முகைதீனுக்கு, மூன்று வழக்கிலும், தலா மூன்றாண்டு சிறை என மொத்தம் 9 ஆண்டு சிறை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இசக்கிபாண்டியனுக்கு, மூன்று மாதம், துரைக்கு இரண்டு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X