சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம்

Added : ஆக 03, 2019 | கருத்துகள் (6)
Advertisement
'உயிரை பணயம் வச்சி திருடுறேன்' விரக்தியில் திருடன் எழுதிய கடிதம்

கடலுார் : மளிகை கடைக்குள் திருட வந்த நபர் கல்லாவில் பணம் இல்லாததால் பொருட்களை சேதப்படுத்தி கடிதம் எழுதி வைத்து சென்ற 'காமெடி' சம்பவம் கடலுாரில் அரங்கேறியுள்ளது.

கடலுார் மாவட்டம் மந்தாரக்குப்பம் கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராஜ் 65. இவர் நேற்று காலை கடையை திறந்தபோது மளிகை பொருட்கள் சிதறிக் கிடந்தன. கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் இரவு கடைக்குள் புகுந்த திருடன் கல்லாபெட்டியில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்தார். இதனால் கடையில் உள்ள அரிசி கடலை மாவு கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி உள்ளார்.மேலும் கடையில் ஆதங்கத்துடன் கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார்.

அதில் 'உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சிருக்க. என்னை ஏமாற்றி விட்டாய். அதுக்கு தான் இந்த குரங்கு வேலையை செய்துள்ளேன்' என எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். மந்தாரக்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-ஆக-201919:08:33 IST Report Abuse
Pugazh V இப்படி சில காமெடி யன்களும் தேவை தான்.
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
03-ஆக-201912:17:26 IST Report Abuse
chennai sivakumar Yematrathin vilimbil petition pottu irukkiraar.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
03-ஆக-201910:04:46 IST Report Abuse
RM Tamil serials are also more dangerous now a days .Every day inside the house regularly people see murders using different methods,kidnap,illegal affairs,revenges ,drinking alcohol all are not good for mental health of people and very dangerous to youngsters mental health. Will the Govt .do some restrictions about this?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X