அரசியல் செய்தி

தமிழ்நாடு

பார்லி.,யில் கருணாநிதிக்கு சிலை: தி.மு.க., கோரிக்கை

Updated : ஆக 03, 2019 | Added : ஆக 03, 2019 | கருத்துகள் (251)
Share
Advertisement
'முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவதோடு, அவரது சிலையை, பார்லிமென்ட்டில் நிறுவ, மத்திய அரசு முன்வர வேண்டும்' என, தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.லோக்சபாவில், தர்மபுரி எம்.பி., செந்தில்குமார், நேற்று(ஆக.,02) பேசியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர், ஏற்கனவே திட்டமிட்ட தேதியில் முடிக்கப்படாமல், கால நீட்டிப்பு செய்து, நடைபெற்று வருகிறது. முக்கிய

'முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்குவதோடு, அவரது சிலையை, பார்லிமென்ட்டில் நிறுவ, மத்திய அரசு முன்வர வேண்டும்' என, தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.latest tamil newsலோக்சபாவில், தர்மபுரி எம்.பி., செந்தில்குமார், நேற்று(ஆக.,02) பேசியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர், ஏற்கனவே திட்டமிட்ட தேதியில் முடிக்கப்படாமல், கால நீட்டிப்பு செய்து, நடைபெற்று வருகிறது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதற்காகவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பிரச்னைக்குரிய மசோதாக்களை தாக்கல் செய்து, அவற்றை அவசர அவசரமாக நிறைவேற்றுவதை, மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர்.


latest tamil newsஜாலியன்வாலா பாக் நினைவு அறக்கட்டளை அமைப்பில், பல ஆண்டுகளாக, காங்கிரஸ் தலைவருக்கு அளிக்கப்பட்டு வந்த பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யும் மசோதாவை, அரசு கொண்டு வருகிறது. இதுதான் முக்கியமா? இதற்காகத்தான், கூட்டத் தொடரை நீட்டித்தீர்களா? பெரும்பான்மை பலம் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? பெண்கள், குழந்தைகள், ஏழைகள் மற்றும் நலிவுற்ற சமூகத்தினருக்கு, பார்லிமென்ட் என்ன நன்மை செய்யப்போகிறது என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அந்த பெருந்தன்மை அரசிடம் இல்லை.


latest tamil newsஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்காக, ஜெனரல் டயர் மீது விசாரணை நடைபெற்றது. ஆனால், தூத்துக்குடியில், ஒரு இளம்பெண் உட்பட, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, உருப்படியாக ஒரு விசாரணையும் இல்லையே. முன்னாள், தமிழக முதல்வர், கருணாநிதிக்கு, 'பாரத் ரத்னா' விருது வழங்க வேண்டும். பார்லிமென்ட் வளாகத்தில், கருணாநிதியின் முழு உருவச்சிலையை நிறுவிட, மத்திய அரசு முன் வர வேண்டும். இவ்வாறு, செந்தில் குமார் பேசினார்.

-நமது டில்லி நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (251)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbanarasu Divakaran - bengaluru,இந்தியா
10-ஆக-201900:35:32 IST Report Abuse
Subbanarasu Divakaran This iconoclast Karunanidhi and his followers have installed his statue on Marina. Crazy DMK men will start doing kalpporam arti to this person who only gathered immensewealth for his family.Tamizhan muttal enru niruppitiraargal.
Rate this:
Cancel
Balakrishnan - Kanyakumari,இந்தியா
09-ஆக-201922:03:57 IST Report Abuse
Balakrishnan இவ்வளவு கழுவி கழுவி ஊத்தியும் திருடி முன்னேறிய திருட்டு கும்பலுக்கு மக்கள் ஒத்துழைப்பதை பார்த்தால் இவர்கள் திருடுவதுதான் சரி என்று மக்கள் சான்றளிக்கிறார்களோ என எண்ண தோன்றுகிறது.
Rate this:
Cancel
K Veerappan - Madurai,இந்தியா
09-ஆக-201919:06:48 IST Report Abuse
K Veerappan ஆட்சியில் இருக்கும்போதே ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட கருணாநிதிக்கு பார்லிமென்டில் சிலை வைத்தால் நாடே தாங்காது. இலங்கை தமிழர்களுக்கு இவர் செய்த துரோகம் ஊரறியும்.தன் சொந்த வாழ்க்கையிலும் , பொது வாழ்க்கையிலும் எந்த வித கட்டுப்பாடையும் கடை பிடிக்காத இந்த ஆளுக்கா சிலை. தமிழ்நாட்டில் இருந்து இத்தனை எம்பீக்களை தேர்ந்து எடுத்து அனுப்பினால் இதுவும் கேட்பார்கள், இன்னமும் கேட்பார்கள்.கருமம்டா சாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X