சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து 

Added : ஆக 03, 2019
Advertisement
 பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீவிபத்து 

பல்லடம்:பல்லடம் அருகே அதிகாலையில், குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமானது.திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் பரமசிவம், 65. பல்லடம் அடுத்த மாதப்பூரில், பிளாஸ்டிக், மற்றும் பழைய சாக்குப்பைகள் வியாபாரம் செய்யும் குடோன் வைத்துள்ளார்.
நேற்று அதிகாலை, குடோன் திடீரென தீ பற்றி எரிய துவங்கியது. குடோனில், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததாலும், பலத்த காற்றின் காரணமாகவும், தீ வேகமாக பரவியது.அருகில் இருந்தவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பல்லடம் தீயணைப்பு துறையினர், கோவை சென்றிருந்த நிலையில், திருப்பூர் மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன் தலைமையில், 2 வாகனங்களில், தீயணைப்பு வீரர்கள் வந்தனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கு பைகள், பாட்டில் கள் மற்றும் குடோன் உள்ளிட்டவை தீயில் முற்றிலும் கருகின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X