சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பயங்கரவாதிகளை எதிர்த்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்?

Added : ஆக 03, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 பயங்கரவாதிகளை எதிர்த்தால் நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்?

யங்கரவாதிகளால், ஆயிரக்கணக்கான உயிர்களை, பொருளாதார இழப்புகளை, இந்தியா சந்தித்து இருக்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிராக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால், இங்குள்ள, 'போர்வையாளர்' கும்பல் பதறுகிறதே... அப்படி யானால், பயங்கரவாதிகளுக்கும், இவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
மறதி... இது, நம் மக்களின் தீராத நோயாக இருப்பதால் தான், அரசியல்வாதிகளும், பயங்கரவாதிகள் எத்தனை பெரிய குற்றங்கள் செய்தாலும், அடுத்த சில ஆண்டுகளுக்குள், அந்த தவறுகளை மறந்துவிடுகின்றனர்.கடந்த, 2008 நவ., 26ம் தேதி மாலை, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக, இந்தியாவின் மிக முக்கிய நகரான மும்பைக்குள் நுழைந்து, ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல்கள், கலாசார மையம், மருத்துவமனைகளை முற்றுகையிட்டு, சரமாரியாக, துப்பாக்கியால் சுட்டனர்.

60 மணி நேரம் நடந்த கொடூர தாக்குதலில், 166 பேர்உயிரிழந்தனர்.இறந்தவர்கள், நம் தேச மக்கள்... ஏதுமறியா அப்பாவிகள். அந்த கொடூரத்திற்கு, ஆட்சியாளர்கள், கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த கொடூர தாக்குதலையும், இறந்தவர்களையும் இன்று, பலர் மறந்து விட்டனர்.மும்பை பயங்கரவாத தாக்குதலை அடுத்து தான், 'இந்தியாவில் நடக்கும், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள, முறையான புலனாய்வு அமைப்பு இல்லை' என்பது, மத்திய அரசிற்கு தெரிய வந்தது.
இதையடுத்து, அப்போதைய, காங்கிரசைச் சேர்ந்த, மன்மோகன் சிங் தலைமையிலான, மத்திய அரசு, 2009ல், தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத்தை நிறைவேற்றியது. அப்போதும், காங்கிரசும், தி.மு.க.,வும் கூட்டணி கட்சியாக இருந்தன. தி.மு.க., ஆதர வோடு தான், அந்த சட்டம்அமலுக்கு வந்தது.இச்சட்டத்தின்படி, எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும், என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு அமைப்புக்கு அதிகாரம் உண்டு.

இதற்கு, மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு தேவையான, போலீஸ் படையை அனுப்ப வேண்டியது, அந்தந்த மாநில அரசின் கடமை.அதாவது, 166 உயிர்களை பலி கொடுத்த பின் தான், என்.ஐ.ஏ., சட்டம், அமலுக்கு வந்தது.கடந்த, 2016 செப்டம்பரில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த, பிப்., 14ம் தேதி, ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், 'ஜெய்ஷ் இ முகமது' என்ற அமைப்பைச் சேர்ந்த, பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.அண்டை நாடான இலங்கையில், ஏப்., 20ம் தேதி, 'ஈஸ்டர்' தினம் அன்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில், பயங்கரவாதிகள் நடத்திய, வெடிகுண்டு தாக்குதலில், 300 பேர், உடல் சிதறி பலியாகினர்.

பயங்கரவாதிகளால், தொடர்ந்து, நம் தேசம் இழப்புகளை சந்தித்து வருகிறது. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' போன்ற பதிலடி கொடுத்தாலும், பயங்கரவாதத்தின் வேரை, முற்றிலும் அறுக்க, போதிய வலிமைமிக்க பிரிவு, நம்மிடம் இல்லை.நம் நாட்டில், பயங்கரவாதிகளுக்கு துணையாக இருக்கும் துரோகிகளை, அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்க, என்.ஐ.ஏ., அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவைப்பட்டது.
இதையடுத்து, ஜூலை, 14ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா, என்.ஐ.ஏ., அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை, பார்லிமென்டில், தாக்கல் செய்தார்.அதன் மீது நடந்த விவாதத்துக்கு பின், மறுநாள், அந்த மசோதா, பார்லிமென்டில், பெரும்பான்மையான, எம்.பி.,க்கள் ஆதரவோடு நிறைவேறியது. 278 ஓட்டுகள் ஆதர வாகவும்; ஆறு ஓட்டுகள் எதிராகவும் விழுந்தன.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக, தி.மு.க., ஓட்டளித்தது.அந்த கூடுதல் சட்டத் திருத்த மசோதாவில், முக்கியமாக, என்ன கூறப்பட்டுள்ளது?ஆள் கடத்தல், கள்ள நோட்டு அடித்தல், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல், இணையக் குற்றங்கள், வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளை, இனி, என்.ஐ.ஏ., விசாரிக்கும்.

மேற்கண்ட குற்றங்களை, மாநில காவல் துறை விசாரித்து வந்தது. அவை, தற்போது, தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும், இந்திய ரூபாய் கள்ள நோட்டுக்களால் தான், இந்தியாவில், பயங்கரவாத செயல்கள் அரங்கேறின. பணம் கொடுத்து, இந்தியாவில், தேச துரோகிகளை உருவாக்கும் பணி, மறைமுகமாக நடக்கின்றன.
தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை, மாநில பிரச்னை அல்ல. அது, தேசத்தின் பாதுகாப்புக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்.இணைய குற்றங்கள் பற்றி, சொல்லவே வேண்டாம்... மோசடி, வன்முறையை துாண்டுதல், கொலை செய்வது எப்படி என, குற்றங்கள் அத்தனையும், இணையம் வழியே நடக்கிறது.இவற்றை, என்.ஐ.ஏ., விசாரிப்பதால், தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

எல்லாம் சரி... இந்த போர்வையாளர் கும்பல், எதற்காக, கூடுதல் சட்ட மசோதாவிற்கு எதிராக பதறுகிறது?அவர்கள் தான், கள்ள நோட்டு அச்சடிக்கின்றனரா, ஆயுதம் தயாரித்து விற்பனை செய்கின்றனரா, இல்லை அவ்வாறு செய்வோரின் கைகூலிகளாக இருக்கின்றனரா?

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை, எதிர்ப்போரின் பின்புலன்களை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் அமைப்புக்கு, எங்கிருந்து நிதி வருகிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.தேசத்தின் பாதுகாப்பிற்காக, மத்திய அரசின் நடவடிக்கையை, போர்வையாளர் கும்பல் எதிர்க்கின்றன. அந்த அமைப்பின் தலைவர்களை நம்பி, அவர்களின் பின்னால், எண்ணற்ற இளைஞர்கள் செல்கின்றனர்.

பயங்கரவாதத்திற்கு, மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கும், அவர்களை நம்பி செல்லும் இளைஞர்களின், எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர்களை, மூளை சலவை செய்து, வன்முறை பாதைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள் என்பதற்கு, என்ன உத்திரவாதம்?

மத்திய அரசு, உடனே, அந்த அமைப்புகள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அண்டை நாட்டிலிருந்து, இந்தியாவிற்கு நுழையும் பயங்கரவாதிகளை மட்டும் ஒழிக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவாக, இங்கே இருக்கும், தேச துரோகிகளையும் களை எடுக்க வேண்டும்.

- சி.கலாதம்பி

sureshmavin@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
10-ஆக-201913:16:24 IST Report Abuse
ashak 2008 நவ., 26ம் தேதி மாலை, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள், கடல் வழியாக, இந்தியாவின் மிக முக்கிய நகரான மும்பைக்குள் நுழைந்து, ரயில் நிலையம், நட்சத்திர ஓட்டல்கள், கலாசார மையம், மருத்துவமனைகளை முற்றுகையிட்டு, சரமாரியாக, துப்பாக்கியால் சுட்டனர். அப்ப கப்பற்படை என்ன சேது கொண்டு இருந்தது ? ஹேமந்த் கர்க்கரேவை கொல்ல நடத்திய நாடகம் தான் தாஜ் ஹோட்டல் தாக்குதல் என்று கேட்டால் நீங்களும் தேசத்துரோகி
Rate this:
Share this comment
Cancel
appavi - doha,கத்தார்
09-ஆக-201918:24:48 IST Report Abuse
appavi அருமை..
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09-ஆக-201903:10:18 IST Report Abuse
Rajagopal அவர்கள் வர போகும் குற்றம் சம்பந்தமான கேஸ்ககளை எண்ணி அலற ஆரம்பித்திருக்கிறார்கள். அவ்வளவேதான். ஆதரவெல்லாம் மண்ணாங்கட்டி. ஈழத்தில் தமிழர்கள் படுகொலை நடந்தபோது உண்டு உறங்கி எழுந்தவர்கள் இவர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X