சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகையில் விதிமீறிய 664 பேரின் டிரைவிங் லைசன்ஸ் தற்காலிக ரத்து

Added : ஆக 03, 2019
Advertisement
 நாகையில் விதிமீறிய 664 பேரின் டிரைவிங் லைசன்ஸ் தற்காலிக ரத்து

நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில் வாகன சட்ட விதிகளை மீறியவர்களின் 1,292 டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதில் 664 டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என எஸ்.பி.,ராஜசேகரன் கூறினார்.

நாகையில் அவர் கூறியதாவது,நாகை மாவட்டத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 464 பேர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 933 பேர், செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டிய 2237 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன சட்ட விதிகளை மீறியவர்களின் 1292 டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டதில் 664 டிரைவிங் லைசன்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

19 ரவுடிகள் குண்டர் சட்டத்திலும்,13 பேர் தடுப்பு காவல் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட 116 வழக்குகளில், 29 பெண்கள்,14 சிறுமிகள்,6 சிறுவர்கள் உட்பட 54 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மோட்டர் வாகன சட்டத்தில் 34625 சிறிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,40 லட்சத்து 32 ஆயிரத்து 530 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு 250 வழக்குகளில் 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 லாரிகள்,147 டிராக்டர்கள், 60 மாட்டு வண்டிகள், 8 ஜே.சி.பி., இயந்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுஉள்ளன.

2373 மது விலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு 2507 பேர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 296 வாகனங்கள், 235499 லிட்டர் சாராயம்,1960 லிட்டர் கள்,21723 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழிப்பறி, செயின் பறிப்பு குற்றங்கள் நடக்காமல் தடுக்க,15 போலீசார் கொண்ட விக்டர் ரோந்து படை 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு எஸ்.பி.,ராஜசேகரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X