சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச லேப்-டாப் வழங்க மாணவர்கள் போராட்டம்: மடத்துக்குளத்தில் மறியல் முயற்சி

Added : ஆக 03, 2019
Advertisement
 இலவச லேப்-டாப் வழங்க மாணவர்கள் போராட்டம்: மடத்துக்குளத்தில் மறியல் முயற்சி

உடுமலை:உடுமலை, எலையமுத்துார் அரசுப்பள்ளி மாணவர்கள் லேப்-டாப் கேட்டு போராட்டம் நடத்தினர்.உடுமலை கல்வி மாவட்டத்தில், 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டு, மேல்நிலை கல்வி படித்த மாணவர்களுக்கு, அரசின் இலவச லேப்-டாப் வழங்கவில்லை.இரண்டு ஆண்டாக வழங்காத நிலையில், நடப்பு ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவதால், அதிருப்தியடைந்த மாணவர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் உடுமலை உட்பட நான்கு இடங்களில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று, எலையமுத்துார், அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், இலவச லேப்-டாப் கேட்டு, ரோடு மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். கல்வித்துறை, வருவாய்த்துறை, போலீசார் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் கூட்டம், வரும் 5ம் தேதி, உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடக்கும். அதில், இறுதி முடிவு எடுக்கப்படும், என உறுதியளித்தனர். அதனையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.மடத்துக்குளம்மடத்துக்குளம் அரசு மேல்நிலைபள்ளி முன்பு, மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர்.மடத்துக்குளம் தாலுகா பகுதியிலுள்ள பள்ளியில், 2017 -18, 2018 -19 ம் ஆண்டு பிளஸ் 2 படித்தவர்களுக்கு, லேப்-டாப் வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த மாணவர்கள், நேற்றுமுன்தினம் கொமரலிங்கத்தில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பல மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.மடத்துக்குளத்திலும் மாணவர்கள் மறியலில் ஈடுபடலாம் என போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று காலையில் அரசு மேல்நிலைபள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில், ஈடுபட்டனர். எதிர்பார்த்தபடி, சிறிது நேரத்தில், தேசிய நெடுஞ்சாலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு, சாலை மறியலுக்கு முயன்றனர்.மாணவர்கள் கூறுகையில், 'கடந்த மாதம் 17ம் தேதி எங்கள் கோரிக்கையை முன் வைத்து அரசு மேல்நிலைபள்ளி, முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டோம். சமரசம் பேசிய அதிகாரிகள், 15 நாட்களில் உறுதியாக அனைவருக்கும் லேப்-டாப் வழங்குவதாக வாக்குறுதி வழங்கினர்.
ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்' என்றனர்.இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன் தலைமையில் சமரசம் பேசிய போலீசார், வரும் 5ம் தேதி மாலை, உடுமலை தாலுகா அலுவலகத்தில், மாணவர்கள், கல்வித்துறை மற்றும் வருவாய்துறையினர் பங்கேற்கும் கூட்டத்தில் லேப்-டாப் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதில், நீங்களும் கலந்து கொண்டு உங்கள் கோரிக்கையை முன்வைக்கலாம்' என தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X